For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்!

கராச்சி : 17 வயதே ஆன பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா, தான் விராட் கோலியை கண்டு பயப்படவில்லை என வாய் சவடால் விட்டுள்ளார்.

Recommended Video

Naseem Shah says he don’t fear Kohli, fans slams about his comments

தன் திறமையை செயலில் காட்டாமல், வாயில் பேசி வருவதாக அவரை சில ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

சிலர் விராட் கோலி பற்றி பேசி புகழ் வெளிச்சம் பெற்றுக் கொள்ள நசீம் ஷா முயல்வதாகவும் கூறி உள்ளனர்.

நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான் நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்

16 வயதில் அறிமுகம்

16 வயதில் அறிமுகம்

நசீம் ஷா 16 வயதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சர்வதேச அறிமுகம் பெற்றார். கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் தான் அறிமுகம் ஆனார். ஆஸ்திரேலிய மண்ணில் 16 வயது வேகப் பந்துவீச்சாளரை பாகிஸ்தான் அறிமுகம் செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

16 வயதில் அறிமுகம்

16 வயதில் அறிமுகம்

நசீம் ஷா 16 வயதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சர்வதேச அறிமுகம் பெற்றார். கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் தான் அறிமுகம் ஆனார். ஆஸ்திரேலிய மண்ணில் 16 வயது வேகப் பந்துவீச்சாளரை பாகிஸ்தான் அறிமுகம் செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

பந்துவீச்சு எடுபடவில்லை

பந்துவீச்சு எடுபடவில்லை

அந்த தொடரில் நசீம் ஷா பந்துவீச்சு எடுபடவில்லை. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அவரை எளிதாக கையாண்டார்கள். அதன் பின் பாகிஸ்தான் மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி இருந்தார் நசீம் ஷா.

ஹாட்ரிக் விக்கெட் சாதனை

ஹாட்ரிக் விக்கெட் சாதனை

அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான ராவல்பிண்டி போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் சாதனை செய்து இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை செய்தார் நசீம் ஷா.

வேகமாக வளர்ந்து வருகிறார்

வேகமாக வளர்ந்து வருகிறார்

அவரது சிறப்பான செயல்பாடுகளை அடுத்து அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் சேர்த்தது. இளம் வயதிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வேகமாக வளர்ந்து வருகிறார் நசீம் ஷா. அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

தன்னை நிரூபிக்கவில்லை

தன்னை நிரூபிக்கவில்லை

மிகவும் குறைந்த அனுபவமே கொண்ட அவர், இன்னும் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசி தன்னை நிரூபிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. முதல் தொடர் என்பதால் அவரை விமர்சிக்க முடியாது.

விராட் கோலி பற்றி பேச்சு

விராட் கோலி பற்றி பேச்சு

ஆனால், அதற்குள் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என கூறப்படும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பற்றி ஒரு பேட்டியில் பேசி உள்ளார் நசீம் ஷா. இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பற்றி பேசிய அவர், விராட் கோலிக்கு பந்து வீசுவது பற்றி கூறினார்.

பயப்பட மாட்டேன்

பயப்பட மாட்டேன்

"நான் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவேன் என நினைக்கிறேன். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். விராட் கோலியை பொறுத்தவரை நான் அவரை மதிக்கிறேன். ஆனால் பயப்பட மாட்டேன்" என்றார் இளம் வீரர் நசீம் ஷா.

வாய் சவடால்

வாய் சவடால்

நசீம் ஷாவின் இந்த பேச்சை சில பாகிஸ்தான் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். அதே சமயம் இந்திய ரசிகர்கள் சிலர் நசீம் ஷா களத்தில் சாதிக்காமல் வாய் சவடால் விட்டு வருவதாக கடுமையாக சாடி உள்ளனர். இன்னும் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசாத அவர் விராட் கோலிக்கு பயப்படவில்லை என கூறி இருப்பது தேவையற்றது என விளாசி உள்ளனர்.

கிண்டல்

கிண்டல்

இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நடக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில், நசீம் ஷா, விராட் கோலிக்கு டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசவே முடியாது. அந்த தைரியத்தில் தான் இப்படி பேசி உள்ளார் என சிலர் அவரை கிண்டலும் செய்துள்ளனர்.

Story first published: Monday, June 1, 2020, 18:25 [IST]
Other articles published on Jun 1, 2020
English summary
Naseem Shah says he don’t fear Kohli. But fans are not happy with this comment. They are slamming young Naseem Shah for just talking.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X