For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

17 வருஷம் ஆச்சு.. இவங்க 2 பேரை இப்ப பார்த்தாலும் பயந்து வருது.. இங்கிலாந்து வீரர் புலம்பல்!

17 வருஷம் ஆச்சு.. இவங்க 2 பேரை இப்ப பார்த்தாலும் பயந்து வருது.. இங்கிலாந்து வீரர் புலம்பல்!

லண்டன் : 17 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து மண்ணில் இந்தியா பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ஒன்றை நினைவுபடுத்திய புகைப்படத்தை பார்த்து தன் பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அப்போதைய இங்கிலாந்து அணி கேப்டன் நாசிர் ஹுசைன்.

அன்றைய தினம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான நாள். இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக கங்குலி புத்துணர்ச்சி ஊட்டிய நாள். யுவராஜ் சிங் - முகமது கைப் என்ற இரண்டு இளம் வீரர்கள் இங்கிலாந்தை புரட்டி எடுத்த நாள்.

இது எல்லாவற்றையும் விட.. இப்படி சொன்னால் எல்லோருக்கும் தெரியும். கங்குலி சட்டையை கழற்றி சுற்றி.. வெற்றியை கொண்டாடிய நாள்.

பயப்பட்ட மாதிரியே ஆயிடுச்சு.. விஜய் ஷங்கருக்கு காயம்.. 2 வீரர்கள் காலி.. பதற்றத்தில் இந்திய அணி! பயப்பட்ட மாதிரியே ஆயிடுச்சு.. விஜய் ஷங்கருக்கு காயம்.. 2 வீரர்கள் காலி.. பதற்றத்தில் இந்திய அணி!

நினைவுகூர்ந்தார்

நினைவுகூர்ந்தார்

நாட்வெஸ்ட் ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் முகமது கைப், தற்போது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால், தங்கள் பழைய வெற்றியை நினைவு கூறும் வகையில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

என்ன புகைப்படம்?

நாட்வெஸ்ட் இறுதிப் போட்டி நடைபெற்ற லார்ட்ஸ் மைதானப் பின்னணியில் தற்போது கைப் - யுவராஜ் நிற்பது போன்ற புகைப்படத்தை கைப் வெளியிட்டு, இதே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறி இருந்தார்.

பயமா இருக்கு

அந்த புகைப்படத்தை பகிர்ந்த நாசிர் ஹுசைன், "இது காலையில் எழுந்திருக்கும் போது, பார்க்க விரும்பும் ஃபோட்டோ கிடையாது. இவங்க 2 பேரையும் இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு.." என பதிவிட்டு பழைய நினைவுகளை கிளறினார். அப்படி என்ன தான் நடந்தது அன்று?

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இங்கிலாந்து, இலங்கை, இந்தியா மோதிய முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்தான் நாட்வெஸ்ட் தொடர். அந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 325 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது.

முடியாத காரியம்

முடியாத காரியம்

அந்த காலகட்டத்தில் 300+ ரன்களை சேஸ் செய்வது என்பது முடியாத காரியம் என்றே கருதப்பட்டது. இந்திய அணிக்கு சேவாக் - கங்குலி அபார துவக்கம் அளித்தனர். சேவாக் 45, கங்குலி 60 ரன்கள் குவித்தனர்.

சறுக்கல்

சறுக்கல்

எனினும், அவர்கள் சென்ற பின் தினேஷ் மோங்கியா 9, சச்சின் 14, டிராவிட் 5 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, இந்தியா 146 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்தது. அவ்வளவு தான் இந்தியா தோல்வி அடையும் என பலரும் எண்ணினர்.

அப்போது ஜோடி சேர்ந்தார்கள் யுவராஜ் சிங் - முகமது கைப். இளம் வீரர்களான இருவரும், போட்டியை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு ஆடினர். 42வது ஓவரில் யுவராஜ் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கைப் அசத்தல்

கைப் அசத்தல்

அப்போது பலரும் நம்பிக்கை இழந்தனர். எனினும், முகமது கைப் 87 ரன்கள் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று, கடைசி ஓவரில் வெற்றி தேடிக் கொடுத்தார். இந்தியா 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்குலி தன் சட்டையை கழற்றி சுற்ற.. இந்தியாவே அந்த வெற்றியை கொண்டாடியது.

தனி வரலாறு

தனி வரலாறு

கங்குலி ஏன் சட்டையைக் கழற்றி சுற்றினார் என்பது தனி வரலாறு. இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் - முகமது கைப் தங்கள் வெற்றியை பறித்ததை இங்கிலாந்து கேப்டன் நாசிர் ஹுசைன் இப்போது வரை மறக்கவில்லை.

Story first published: Saturday, May 25, 2019, 10:01 [IST]
Other articles published on May 25, 2019
English summary
Nasser Hussain still have nightmares about Yuvraj singh and Mohammad Kaif
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X