“யார் வேண்டுமானாலும் இந்தியாவை வீழ்த்தலாம்”.. கோலியிடம் உள்ள முக்கிய பிரச்னை.. நாசர் ஹுசைன் பளீச்..!

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் எந்த அணி வேண்டுமானாலும் இந்திய அணியை சுலபமாக தோற்கடித்துவிடும் என ஜாம்பவான் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது தகுதிச்சுற்றுப்போட்டிகள் நடந்து வரும் சூழலில் வரும் 23ம் தேதி முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த முறை எந்தவொரு அணிக்கும் சாதகமாக இல்லாதவாறு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறுவதால் கோப்பையை வெல்லும் போட்டி கடினமாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பையில் கவனம் ஈர்த்த 12வயது சிறுமி.. நன்றிகடன்பட்ட கிரிக்கெட் வாரியம்..சுவாரஸ்ய நிகழ்வுடி20 உலகக்கோப்பையில் கவனம் ஈர்த்த 12வயது சிறுமி.. நன்றிகடன்பட்ட கிரிக்கெட் வாரியம்..சுவாரஸ்ய நிகழ்வு

இந்திய அணி நம்பிக்கை

இந்திய அணி நம்பிக்கை

அந்தவகையில் இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கக்கூடிய அணிகளில் இந்திய அணி முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடருக்காக அமீரகத்தில் கடந்த மாதம் முழுவதும் விளையாடியுள்ளனர். இதே போல இந்திய அணியின் டாப் ஆர்டரில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என சிறப்பான வீரர்கள் இருப்பதால் அதீத நம்பிக்கையை வைத்துள்ளனர்.

நாசர் ஹுசைன் சாடல்

நாசர் ஹுசைன் சாடல்

இந்நிலையில் இந்திய அணியிடம் இருக்கும் முக்கிய பிரச்னையால் அந்த அணியை யார் வேண்டுமேனாலும் தோற்கடிக்கலாம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் இது டி20 போட்டி. என்னவேண்டுமேனாலும் நடக்கலாம். ஒரு தனிநபரின் சிறப்பான ஆட்டம் அல்லது ஒருவரின் 70 - 80 ரன்கள், குறிப்பிட்ட 3 பந்துகள் என யார் வேண்டுமானாலும் ஆட்டத்தை ஒரே ஓவரில் மாற்றி அமைக்ககூடும்.

என்ன காரணம்

என்ன காரணம்

குறிப்பாக இந்திய அணியை நாக் அவுட் போட்டிகளில் எந்த அணி வேண்டுமானாலும் தோற்கடிக்கலாம். ஏனென்றால் இந்திய அணி எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும் நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவதை அனைவரும் அறிவோம். உதாரணத்திற்கு கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை இந்தியா சென்றது. போட்டியும் இந்தியாவின் பக்கமே கடைசி வரை சென்றது. திடீரென அந்த போட்டி ஒரு குறைந்த இலக்கை துரத்தும் போட்டியாக மாறிவிட்டது. இந்தியாவிடம் பிளான் பி என்பதே இல்லை. ஒரே ஒரு திட்டத்துடன் நாக் அவுட் போட்டிகளில் நம்பிக்கையாக களமிறங்குகின்றனர். அது சொதப்பிவிட்டால் ப்ளான் பி என்பதே இல்லை. இது ரசிகர்களுக்கும் வருத்தத்தை கொடுக்கிறது.

 இந்தியாவின் ரெக்கார்ட்

இந்தியாவின் ரெக்கார்ட்

நாசர் ஹுசைன் கூறுவதை போன்று தான் இந்தியாவின் நிலைமை இருந்துள்ளது. கடைசியாக 2013ம் ஆண்டு தோனியின் தலைமையில் இந்திய அணி கோப்பை வென்றது. அதன்பிறகு 2015ம் ஆண்டு உலகக்கோப்பையில் அரையிறுதியில் வெளியேறியது. 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் வெளியேறியது. 2019ம் ஆண்டு உலகக்கோப்பையிலும் அரையிறுதிதான். 2017ம் ஆண்டு சாம்பியன்ஷிப் டிராபியில் இறுதிப்போட்டிவரை சென்றது. இந்தாண்டு தொடக்கத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இதனை மாற்றி அமைக்க நிச்சயம் கோலி இந்தாண்டு போராட வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Nasser Hussain thinks "Anyone Could Upset India In Any Knockout Game" in t20 worldcup
Story first published: Friday, October 22, 2021, 18:30 [IST]
Other articles published on Oct 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X