For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திடீரென மாறிய ஸ்டைல்.. பிரேக்கிற்கு பின் புரட்டி எடுத்த நடராஜன்.. ஆடிப்போன ஆஸி பேட்ஸ்மேன்கள்.. செம!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் பவுலிங் செய்து வரும் விதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்திய அணியின் முக்கியமான பவுலர்கள் பும்ரா, அஸ்வின், ஜடேஜா காயம் அடைந்த நிலையில் இளம் வீரர்களை நம்பி இந்திய அணி களமிறங்கி உள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் தற்போது நடராஜன் அறிமுகம் ஆகியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே நடராஜன் தற்போது சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

நடராஜன்

நடராஜன்

இந்த போட்டியின் தொடக்கத்தில் நடராஜன் பவுலிங் செய்த விதம் பெரிய அளவில் ஈர்க்கும்படியாக இல்லை. டெஸ்ட் போட்டி என்பதாலோ என்னவோ நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. நடராஜனின் பவுலிங் நல்ல லென்த் மற்றும் லைனில் இருந்தது.அதில் நடராஜன் எதுவும் தவறு செய்யவில்லை.

அறிமுகம்

அறிமுகம்

ஆனால் நடராஜனின் பவுலிங்கில் முதல் பாதியில் பெரிய அளவில் வேரியேஷன் இல்லை. அதோடு ரன்னை கட்டுப்படுத்தும் வகையில் நடராஜன் பவுலிங் செய்தாரே ஒழிய, விக்கெட் எடுக்கும் வகையில் நடராஜன் பவுலிங் செய்யவில்லை. முதல் 50 ஓவர்களில் நடராஜன் போட்ட பெரும்பாலான ஓவர்கள் விக்கெட் எடுக்கும் வகையில் இல்லை.

லென்த்

லென்த்

இந்த நிலையில்தான் நடராஜன் போக போக தனது பவுலிங் லென்தை மாற்றினார். திடீரென ஷார்ட் பந்துகளை நடராஜன் வீச தொடங்கினார். வரிசையாக ஒரே ஓவரில் நிறைய ஷாட் பந்துகளை நடராஜன் வீச தொடங்கினார். முக்கியமாக மார்னஸ், வேட் இருவரும் ஷாட் பந்தில் அவுட்டாவார்கள் என்பதால் அவர்களுக்கு மாறி மாறி ஷாட் பந்துகளை நடராஜன் வீசினார்.

 இரண்டு விக்கெட்

இரண்டு விக்கெட்

அதிலும் இவர் டீ பிரேக்கிற்கு பின் வித்தியாசமாக பவுலிங் செய்தார். விளைவு வரிசையாக அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது. அடுத்தடுத்து வேட், மார்னஸ் இருவரும் அவுட் ஆனார்கள். இரண்டு பேருமே நடராஜனின் ஷாட் பந்தில்தான் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள் . அதிலும் மார்னஸ் அவுட்டான விதம் அவருக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

தொடக்கம் மோசம்

தொடக்கம் மோசம்

ஆட்டத்தின் தொடக்கத்தில் அழுத்தம் காரணமாக நிறைய லோ பால், ஸ்லோ பந்துகளை நடராஜன் வீசி வந்தார். ஆனால் போக போக நடராஜன் தனது பழைய ஸ்டைலை மீட்டு கொண்டு வந்தார். இதன் பலனாக நடராஜன் 2 விக்கெட் எடுத்துள்ளார். இதனால் நாளைய போட்டியிலும் நடராஜன் பவுலிங் மேலும் சிறப்பாகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, January 15, 2021, 12:59 [IST]
Other articles published on Jan 15, 2021
English summary
Debutant Natarajan bowling is really good against Australia in the last test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X