For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்பவுமே விளையாட்டுதனம்தான்.. பண்ட் செய்த காரியம்.. வைரலாகும் நாதன் லைன் வெளியிட்ட போட்டோ!

சிட்னி: இந்திய வீரர்களின் கையெழுத்திடப்பட்ட ஜெர்சியை பெற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைன், இந்திய அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை தி கப்பா மைதானத்தில் 33 வருடமாக எந்த அணியும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது இல்லை என்ற வரலாற்றை இந்திய அணி கடந்த வாரம் மாற்றி எழுதியது.கப்பாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது.

அடுத்த தமிழக வீரரும் காலி?.. எவ்வளவு எதிர்பார்த்தோம்.. இப்படி பண்ணலாமா.. தினேஷ் கார்த்திக் ஷாக்! அடுத்த தமிழக வீரரும் காலி?.. எவ்வளவு எதிர்பார்த்தோம்.. இப்படி பண்ணலாமா.. தினேஷ் கார்த்திக் ஷாக்!

இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் கேப்டன் ரஹானே நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

பேட்டி

பேட்டி

கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைனுக்கு ரஹானே இந்திய அணியின் டீ சர்டை பரிசாக வழங்கினார். அந்த போட்டி ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைனுக்கு 100வது போட்டியாகும். இதனால் அவரை பாராட்டும் வகையில் ரஹானே அவருக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கினார்.

ஸ்லெட்ஜிங்

ஸ்லெட்ஜிங்

இந்திய வீரர்களை மோசமான வார்த்தைகள் மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து தாக்கி வந்தனர். பல முறை ஸ்லெட்ஜிங் செய்து மோசமாக நடந்து கொண்டனர். ஆனால் ரஹானே ஒரு கேப்டனாக, ஒரு மனிதனாக ஆஸ்திரேலிய வீரர் ஒருவருக்கு இந்திய அணியின் ஜெர்சியை பரிசளித்து அசத்தினார். தற்போது நாதன் லைன் இதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி

நன்றி

இந்திய அணிக்கும், கேப்டன் ரஹானேவிற்கும் நன்றி. வீரர்களில் கையெழுத்து இடப்பட்ட இந்திய அணியின் ஜெர்சியை கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்களின் உயர்ந்த குணத்தை இது காட்டுகிறது. என்னுடைய கலெக்சனில் இது இடம்பெறும், நன்றி, என்று நாதன் லைன் குறிப்பிட்டுள்ளார்.

வைரல்

வைரல்

இந்திய வீரர்கள் கையெழுத்திட்டு கொடுத்த ஜெர்சியை நாதன் லைன் வெளியிட்டுள்ளார். அதில் இளம் வீரர் பண்ட் ஸ்மைலி ஒன்றை வரைந்து கையெழுத்திட்டு இருந்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. பண்ட் களத்தில் எப்போதும் குறும்பாக செயல்படுவார்.

பாடல்

பாடல்

போட்டிக்கு இடையே ஸ்பைடர் மேன் பாடல் பாடுவார். குறும்பாக ஏதாவது பேசி கிண்டல் செய்வார். இந்த நிலையில் இன்னொரு வீரருக்கு கொடுத்த பரிசிலும் இப்படி அவர் ஸ்மைலி வரைந்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. பண்டிற்கு எப்பவுமே விளையாட்டுதனம்தான் என்று அவரை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Story first published: Thursday, January 28, 2021, 12:12 [IST]
Other articles published on Jan 28, 2021
English summary
Nathan Lyon thanks Team India and Rahane for the nice gesture after winning Border- Gavaskar Series goes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X