For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விக்கெட் எடுக்க முடியவில்லை.. கடும் விரக்தி.. பதற்றத்தில் ஆஸி. மூத்த வீரர் செய்த காரியம்.. போச்சு

சிட்னி: இந்திய அணி வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் நாதன் லைன் கடும் விரக்திக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்தது.

அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங் அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்

அதன்பின் நேற்று பேட்டிங் இறங்கிய இந்திய அணி வீரர்கள் அவசரமாக ஆடி தேவையின்றி விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இன்றும் வரிசையாக ரஹானே, புஜாரா, பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ஆனால்

ஆனால்

ஆனால் அதன்பின் பேட்டிங் இறங்கிய வாஷிங்க்டன் சுந்தர் - ஷரத்துல் தாக்கூர் இரண்டு பேரும் களமிறங்கி அதிரடியாக ஆட தொடங்கினார்கள். ஆஸ்திரேலிய பவுலர்கள் எப்படி முயன்றாலும், எதற்கும் கட்டுப்பாடாமல் தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்து வந்தனர். தேவையான பந்துகளில் பவுண்டரி, சிக்ஸ் அடித்து தேவையில்லாத பந்துகளை விட்டனர்.

மாஸ்

மாஸ்

அதிலும் கும்மின்ஸ், ஹஸல்வுட், ஸ்டார்க் என்று பாரபட்சம் பார்க்காமல் ஆஸ்திரேலிய பவுலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் வெளுத்துக்கட்டினார்கள். அதிரடியாக ஆடிய ஷரத்துல் தாக்கூர் ஒரு பக்கம் அரை சதம் அடித்தார். அதிலும் லைன் பந்தில் அவர் சிக்ஸ் அடித்து அரை சதம் எடுத்தது பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் வாஷிங்க்டன் சுந்தரும் அதிரடியாக ஆடி அரை சதம் எடுத்தார்.

சிறப்பு

சிறப்பு

இரண்டு பேரின் பார்ட்னர்ஷிப் 120+ரன்களை கடந்து சென்றது. இவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் ஆஸி. பவுலர்கள் கடுமையாக திணறினார்கள். அதிலும் இன்று 100வது டெஸ்ட் போட்டியில் நாதன் லைன் ஆடி வருகிறார்.இந்த போட்டியில் 28 ஓவர்கள் வீசி உள்ள லைன் ஒரே ஒரு விக்கெட் எடுத்து திணறி வருகிறார்.

திணறல்

திணறல்

இன்று இந்திய வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறிய லைன் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து களத்திலேயே கடவுளை வேண்ட தொடங்கிவிட்டார். அதுமட்டுமின்றி ஸ்டம்பில் இருந்த பெயில்களை இடம்மாற்றி வைத்தார். பெயிலை இடம்மாற்றி வைப்பது இவரின் வழக்கம் ஆகும். இப்படி வைத்தால் விக்கெட் விழும் என்று இவருக்கு நம்பிக்கை.

நம்பிக்கை

நம்பிக்கை

இதன் காரணமாக விக்கெட் விழ வேண்டும் என்று நாதன் லைன் பெயில்களை இடம்மாற்றி வைத்தார். ஆனால் அதன்பின்பும் கூட நாதன் லைன் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினார்.186 ரன்னுக்கு 6வது விக்கெட்டை இழந்த இந்திய அணி அதன்பின் 309 ரன்னிற்குதான் 7வது விக்கெட்டை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 17, 2021, 12:31 [IST]
Other articles published on Jan 17, 2021
English summary
Nathyon Lyon went superstitious against Indian batters after failed to take wickets in the final test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X