For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அங்கேயா? கெஞ்சி கூப்பிட்டா கூட வரமாட்டோம்.. தெறித்து ஓடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

பெங்களூரு : பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியை இந்திய கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித்து வருவதாக சில செய்திகள் வந்துள்ளது.

தேசிய கிரிக்கெட் அகாடமி தான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல்நிலை மற்றும் தகுதி பற்றி பரிசோதித்து, அவர்களுக்கு மேல் சிகிச்சை போன்றவற்றில் உதவ வேண்டும்.

ஆனால், அங்கு இருக்கும் நடைமுறைகள் சரியாக இல்லை என்பதால், பல இந்திய கிரிக்கெட் வீரர்கள், வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் அங்கே செல்லாமல் தவிர்த்து வருகிறார்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

அக்கறையில்லையா?

அக்கறையில்லையா?

இங்கிலாந்து தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு ஏராளமான காயங்கள் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பிசிசிஐ வீரர்கள் உடல் நலனில் என்ன அக்கறை கொண்டுள்ளது என்ற கேள்விகள் எழுந்தன.

ஒண்ணுமே சரியில்லை

ஒண்ணுமே சரியில்லை

தேசிய கிரிக்கெட் அகாடமியில் எடுக்கப்படும் பரிசோதனைகள் பெங்களூருவில் இருக்கும் ஏதோ ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி முடிவுகள் பெறப்படுவதாக கூறப்படுகிறது. யார் அதை ஒழுங்குபடுத்துகிறார்கள் என்பதும் தெரியவில்லை என கூறுகின்றனர்.

ஐபிஎல் அணியிடம் உதவி

ஐபிஎல் அணியிடம் உதவி

இந்தியா ஏ கிரிக்கெட் வீரர் ஒருவர், தனக்கு காயம் ஏற்பட்ட போது இங்கே வந்துள்ளார். இங்கே அகாடமியில் அவர்கள் செய்யும் கந்தரகோல வேலைகளை பார்த்து பயந்து போன அந்த வீரர், தன் ஐபிஎல் அணி நிர்வாகத்திடம் உதவி பெற்று வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

கெஞ்சி கூப்பிட்டும் வர மறுத்த வீரர்

கெஞ்சி கூப்பிட்டும் வர மறுத்த வீரர்

அதே போல, சமீபத்தில் இங்கிலாந்து தொடர் முடிந்து இந்தியா வந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர், காய்ச்சல் வந்த போது தன் ஊரில் இருந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து அவரை கெஞ்சி கூப்பிட்டும், அங்கே சிகிச்சை சரியாக இருக்காது என்பதால், அவர் அங்கு செல்ல மறுத்துள்ளார். இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது பிசிசிஐ-இன் வீரர்கள் அக்கறை என சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

Story first published: Monday, October 1, 2018, 18:42 [IST]
Other articles published on Oct 1, 2018
English summary
National Cricket Academy avoided by Indian cricketers. It is not running properly says reports.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X