For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவருக்கு ஃபிட்னெஸ் சர்டிபிகேட் கொடுத்தது யாரு? எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்

மும்பை : இந்திய பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெறும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

வெறும் பத்து பந்துகள் மட்டுமே வீசிய அவர் இடுப்பு வலியால் அவதிப்பட்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஏற்கனவே, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷர்துல் தாக்குர் இடுப்பு வலியால் பாதி போட்டியில் இருந்து வெளியேறி இருந்தார்.

அக்கறை உள்ளதா?

அக்கறை உள்ளதா?

தற்போது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் அவர் மீண்டும் வலி ஏற்பட்டு போட்டியின் துவக்கத்தில் வெளியேறி இருப்பது பிசிசிஐ மீது விமர்சனத்தை கிளப்பி உள்ளது. சமீப காலங்களில் பல வீரர்கள் இது போல காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். வீரர்களின் உடல் நலனில் பிசிசிஐ-க்கு உண்மையாகவே அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் கிரிக்கெட் விமர்சகர்களால் கேட்கப்படுகிறது.

2வது டெஸ்டில் ஆட முடியாது

2வது டெஸ்டில் ஆட முடியாது

தன் முதல் டெஸ்ட் அறிமுக போட்டியான வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் வெறும் பத்து பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் இடுப்பு வலியால் வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார். பிசிசிஐ வெளியிட்டுள்ள குறிப்பில் அவரது காயம் பற்றி கண்காணித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளது. அவர் இரண்டாம் டெஸ்டில் மீதமுள்ள நாட்களில் ஆட முடியாது என்றே தெரிகிறது.

அனுமதி அளித்தது யார்?

அனுமதி அளித்தது யார்?

ஆசிய கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டு விலகிய பத்தாவது நாளில் ஷர்துல் தாக்குர், உள்ளூர் விஜய் ஹசாரே தொடரில் கலந்து கொண்டு போட்டிகளில் பந்து வீசினார். அவரது காயத்தின் நிலை அப்போது எப்படி இருந்தது? வீரர்களின் காயம், உடற்தகுதி போன்றவற்றை கவனித்து வரும் தேசிய கிரிக்கெட் அகாடமி, எப்படி காயம் ஏற்பட்ட 10 நாட்களில் ஷர்துல்-ஐ விஜய் ஹசாரே தொடரில் ஆட அனுமதி அளித்தது? அவரது காயம் அப்போது சரியாகி விட்டதா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.

கிரிக்கெட் அகாடமி சரியில்லை

கிரிக்கெட் அகாடமி சரியில்லை

வீரர்களின் உடற்தகுதியை கண்காணித்து வரும் தேசிய கிரிக்கெட் அகாடமி சரியாக செயல்படுவதில்லை என ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் அங்கே செல்வதை தவிர்த்து வருகிறார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர்களின் அலட்சியத்தால் காயத்தில் இருந்த ஒரு வீரர் அணியில் சேர்க்கப்பட்டு தன் முதல் அறிமுக போட்டியில் ஆட முடியாத நிலையில் இருக்கிறார். அது மட்டுமின்றி, அவரது காயம் மற்ற வீரர்களின் வேலைப் பளுவை கூட்டியுள்ளது. இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மொத்தமாகவே 5 வீரர்கள் மட்டுமே பந்து வீசும் திறன் கொண்டவர்களாக இருந்தார்கள். அதில் ஒருவர் வெளியேறிய நிலையில், நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசி வருகிறார்கள். ஒரு கூடுதல் பகுதி நேர பந்துவீச்சாளர் கூட இல்லாத வகையில் அணியை திட்டமிட்டுள்ளார்கள் கோலி மற்றும் ரவி சாஸ்திரி.

[அங்கேயா? கெஞ்சி கூப்பிட்டா கூட வரமாட்டோம்.. தெறித்து ஓடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்]

Story first published: Saturday, October 13, 2018, 13:37 [IST]
Other articles published on Oct 13, 2018
English summary
National cricket academy under scanner after Shardul Thakur got Injured in just 10 balls in first match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X