For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கு முடிவே இல்லையா? அவசரமாக உள்ளே வந்த கார்.. பாதியில் வெளியேறிய சைனி.. இந்திய அணி ஷாக்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணியின் இளம் வீரர் சைனி காயம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் இதுவரையிலான ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

தற்போது வரை 5 விக்கெட்டை இழந்து 259 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. தமிழக வீரர் நடராஜன் 2, வாஷிங்க்டன் சுந்தர் 1 விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்.

என்ன இவரெல்லாம் தமிழில் பேச ஆரம்பிச்சிட்டாரு.. ஆஸி. களத்தில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ்.. செம வைரல்என்ன இவரெல்லாம் தமிழில் பேச ஆரம்பிச்சிட்டாரு.. ஆஸி. களத்தில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ்.. செம வைரல்

விக்கெட்

விக்கெட்

இந்திய அணியில் முக்கியமான பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். பும்ரா, ஷமி, உமேஷ், ஜடேஜா, அஸ்வின் என்று முக்கியமான பவுலர்கள் எல்லோரும் காயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக சிராஜ், நடராஜன், சைனி , ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் இந்திய அணிக்காக பவுலிங் செய்து வருகிறார்கள்.

பவுலிங்

பவுலிங்

முக்கியமான வீரர்கள் காயம் அடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் சைனி பவுலிங் செய்யும் போது காயம் அடைந்தார். பவுலிங் செய்ய ஓடி வரும் போது இவருக்கு தொடையில் தசை பிடிப்பு ஏற்பட்டது. அதன்பின் இவருக்கு அடிவயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

சென்றார்

சென்றார்

இதனால் மருத்துவர்கள் உதவியுடன் களத்தை விட்டு பாதியில் சென்ற சைனி மீண்டும் களத்திற்கு வந்தார். ஆனால் மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டதால் களத்தில் இருந்து வெளியேறினார். அவர் வலியால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

காயம்

காயம்

இதைத்தொடர்ந்து சைனி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவருக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதற்காக காரில் இவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவரின் ஸ்கேன் முடிவு இன்னும் வரவில்லை. இன்று மீதம் இருக்கும் போட்டியில் சைனி பவுலிங் செய்ய வாய்ப்பில்லை என்கிறார்கள்.

Story first published: Friday, January 15, 2021, 17:25 [IST]
Other articles published on Jan 15, 2021
English summary
Navdeep Saini took for scanning after getting a groin injury while bowling.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X