For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஜய் ஷங்கரை இன்னும் ஏன் டீம்ல வைச்சுருக்கீங்க? அநியாயத்துக்கு கோபப்படும் அந்த வீரரின் ரசிகர்கள்!

Recommended Video

தொடர்ந்து சொதப்பல்... விஜய் ஷங்கருக்கு எதிராக பொங்கும் ரசிகர்கள்

மான்செஸ்டர்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆடிய அதே இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியின் இந்த முடிவு சரியானதே என பலரும் கூறிய நிலையில், ஒரு சில ரசிகர்கள் மட்டும் விஜய் ஷங்கர் மீது தங்கள் கோபத்தை கொட்டிக் கொண்டு இருந்தார்கள்.

ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்? ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்?

விஜய் ஷங்கர் இடம் பெற்றார்

விஜய் ஷங்கர் இடம் பெற்றார்

தவான் காயமடைந்த நிலையில், மிடில் ஆர்டரில் இறங்கிய ராகுல் துவக்க வீரராக மாறினார். மிடில் ஆர்டரில் களமிறங்க விஜய் ஷங்கர் அணியில் இடம் பெற்றார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியில் அவர் பங்கேற்றார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

இந்த நிலையில், தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் போட்டியிலும் அவர் பங்கேற்ற நிலையில், ரிஷப் பண்ட் ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டுள்ளனர். ரிஷப் பண்ட் காயமடைந்த தவானுக்கு மாற்று வீரராக உத்தேச அணியில் 15 வீரர்களில் ஒருவராக சேர்க்கப்பட்டார்.

ஏன் கோபம்?

ஏன் கோபம்?

ஆனால், களமிறங்கும் அணியில் அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு கிடைக்காத வாய்ப்பு, விஜய் சரியாக தன்னை நிரூபிக்காத விஜய் ஷங்கருக்கு கிடைத்து வருகிறது என்பதே அந்த ரசிகர்களின் கோபத்துக்கு முக்கிய காரணம்.

2 போட்டிகள் மட்டுமே

2 போட்டிகள் மட்டுமே

விஜய் ஷங்கர் உலகக்கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்றுள்ளார். அதில் 15* மற்றும் 29 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்துவீச்சிலும் கலக்கினார். புவனேஸ்வர் குமார் காயமடைந்த நிலையில், அவர் இடத்தை நிரப்பி பந்துவீச்சில் கைகொடுத்தார்.

வாய்ப்பு கொடுக்க வேண்டும்

வாய்ப்பு கொடுக்க வேண்டும்

விஜய் ஷங்கர் உண்மையில் ரிஷப் பண்ட்டை விட பயனுள்ள வீரர் என்பதை பாகிஸ்தான் போட்டியில் நிரூபித்தார். அவசர சூழ்நிலையில், ஒரு முக்கிய பபந்துவீச்சாளரை இந்தியா இழந்த போது அணிக்கு கைகொடுத்தார். அவரது பேட்டிங் தற்போது சராசரியாக உள்ளது. ஆனால், ஏதோ ஒரு போட்டியில் அடித்து ஆடும் ரிஷப் பண்ட்டை விட நல்ல நிலையில் தான் உள்ளது. அவருக்கு இன்னும் ஒரீரு போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்கிறர்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

Story first published: Thursday, June 27, 2019, 16:54 [IST]
Other articles published on Jun 27, 2019
English summary
ND vs WI Cricket World cup 2019 : Rishabh Pant fans unhappy over Vijay Shankar once again
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X