For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பொ.......றுமையாக ஆடினோம்... தோத்துட்டோம்.. கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி குறித்து ரகானே புலம்பல்

Recommended Video

IPL 2019: Kolkata vs Rajasthan | அரைசதம் அடித்து அணியைக் கவிழ்க்கும் பேட்ஸ்மேன்கள்.. வீடியோ

ஜெய்பூர்: பொறுமையான இன்னிங்ஸ் ஆடியதே தோல்விக்கு காரணம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரகானே கூறியிருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. டாஸ்வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ரகானே 5 ரன்களிலும், பட்லர் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 73 ரன்கள் குவித்தார்.

அரைசதம் அடித்து அணியைக் கவிழ்க்கும் பேட்ஸ்மேன்கள்.. இதுக்கா டி20 பார்க்குறோம்? ரசிகர்கள் எரிச்சல்! அரைசதம் அடித்து அணியைக் கவிழ்க்கும் பேட்ஸ்மேன்கள்.. இதுக்கா டி20 பார்க்குறோம்? ரசிகர்கள் எரிச்சல்!

139 ரன்கள் எடுத்தது

139 ரன்கள் எடுத்தது

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில், குர்னீ 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கொல்கத்தா முதலிடம்

கொல்கத்தா முதலிடம்

தொடக்க வீரரான லின் 50 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான சுனில் நரேன் 47 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அந்த அணி 13.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பு 140 ரன்கள் குவித்து அபார வெற்றிபெற்றனர். இதன்மூலம் கொல்கத்தா அணி 8 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

ரகானே பேட்டி

ரகானே பேட்டி

தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறியதாவது: போட்டியில் 150 முதல் 160 ரன்கள் வரை அடித்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும். பந்துவீச்சில் சரியான திட்டங்களை செயல்படுத்த வில்லை.

சரியாக ஆடவில்லை

சரியாக ஆடவில்லை

மேலும், பேட்டிங் வரிசையிலும் ஸ்மித் ஒருவரை தவிர நாங்கள் யாரும் அதிரடியாக ஆட வில்லை.இதுபோன்ற மைதானங்களில் விளையாட மேலும் பயிற்சி எடுக்க வேண்டும்.

அதுதான் காரணம்

அதுதான் காரணம்

தவறுகளை திருத்தி, வேகமாக ரன்களை குவித்து அடுத்த போட்டியில் தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு வருவோம். மேலும், 20 ஓவர் போட்டிகளில் பொறுமையான இன்னிங்ஸ் ஆடக் கூடாது, அதுவே தோல்விக்கு காரணம் என்று ரகானே கூறினார்.

Story first published: Monday, April 8, 2019, 11:27 [IST]
Other articles published on Apr 8, 2019
English summary
Need to Learn From Our Mistakes Says Rajasthan Royals Captain Ajinkya Rahane After Defeat Against KKR.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X