For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல..! கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..? கபிலை கழுவும் நெட்டிசன்ஸ்

Recommended Video

Nettisons trolled Ravi Shastri | ரவி சாஸ்திரிக்கு எதிராக பொங்கி எழுந்த கிரிக்கெட் ரசிகர்கள்!

மும்பை: பயிற்சியாளர் தேர்வின் போது, ஹெசன் என்பதற்கு பதிலாக ஹாசன் என்று கபில் தேவ் தலைமையிலான குழு எழுதியிருந்ததை கண்டுபிடித்த நெட்டிசன்கள், கழுவி, கழுவி ஊற்றுகின்றனர்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப் பட்டு இருக்கிறார். அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை ஏற்கனவே பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து புதிய பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப் பட்டன. கிட்டத்தட்ட 2,000 விண்ணப்பங்கள் வந்ததாக சொல்லப்பட்டது. அதில் டாம் மூடி, மைக் ஹெசன், பில் சிம்மன்ஸ், ராபின் சிங், ரவி சாஸ்திரி உட்பட 6 பேர் இறுதி செய்யப்பட்டு நேர்காணல் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

கபில் அறிவிப்பு

கபில் அறிவிப்பு

அவர்களில் சிம்மன்ஸ், போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து எஞ்சிய 5 பேரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை பயிற்சியாளர் தேர்வுக் குழு தலைவர் கபில் தேவ் அறிவித்தார்.

தேர்வுக்குழு விளக்கம்

தேர்வுக்குழு விளக்கம்

மீண்டும் ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார். சாஸ்திரி, மைக் ஹெசன், டாம் மூடி ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் என்ன செய்ய போகிறேன் என்று தொகுத்து அளித்த விதத்திலும், கம்யூனிகேஷன் திறனிலும் சாஸ்திரி சிறந்து விளங்கியதால் அவரை தேர்வு செய்ததாக கபில் தேவ் தெரிவித்தார்.

கடும் போட்டி

கடும் போட்டி

ரவி சாஸ்திரிக்கு அடுத்தடுத்த இடங்களில் மைக் ஹெசன் மற்றும் டாம் மூடி இருந்துள்ளனர். மைக் ஹெசனும் டாம் மூடியும் சாஸ்திரிக்கு கடுமையாக போட்டியை அளித்திருக்கின்றனர்.

பிசிசிஐ தவறு

பிசிசிஐ தவறு

ஆகையால், அந்த டாப் 3 பேரின் லிஸ்ட்டை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டது. அதில் மைக் ஹெசனின் பெயரை கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழு தவறாக எழுதியிருப்பது தெரிந்தது.

ஹசன் என்பதில் தவறு

ஹசன் என்பதில் தவறு

அதாவது Mike Hesson தான் அவரது பெயர். ஆனால் அந்த லிஸ்ட்டில் Mike Hassen என எழுதப்பட்டிருந்தது. ஹெசன் என்பதற்கு பதிலாக ஹாசன் என்று தவறாக எழுதியிருந்ததை கண்ட நெட்டிசன்கள், அவ்வளவு தான்... உள்ளே புகுந்து கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

நெட்டிசன்கள் ஆதங்கம்

கடுமையாக விமர்சனங்களுடன், கபில் தேவ் தலைமையிலான ஆலோசனை குழுவை கழுவி, கழுவி ஊற்றி வருகின்றனர். ஒரு போட்டியாளரின் பெயரை கூட தெளிவாக எழுத்து பிழையில்லாமல் எழுத தெரியவில்லை. எப்படி இவர்கள் தேர்வாளர்களாக மாறினர் என்று கேலி செய்கின்றனர்.

முட்டாள்தனம்

சரியாக பெயரை எழுத தெரியவில்லை... ஆக ரவி சாஸ்திரி ஒருவர் தான் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. எல்லாரையும் முட்டாளாக்கும் வகையில் தவறான முடிவை கபில்தேவ் மற்றும் குழுவினர் எடுத்துள்ளனர் என்று தெரிவித்திருக்கின்றனர்.

கூகுள் பார்த்திருக்கலாம்

ரிஷப் கச்சுரா என்பவர் பெயரை எழுதும் முன்பாக, கூகுள் பண்ணி பார்த்திருக்கலாம். கரெக்டான ஸ்பெல்லிங் கிடைத்திருக்கும். செக் செய்து இருக்கலாம் என்று ஆதங்கப் படுகிறார். எலக்ஷனா, செலஷனா என்றும் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Saturday, August 17, 2019, 13:51 [IST]
Other articles published on Aug 17, 2019
English summary
Netizens criticized kapil dev and co’s selection regarding Indian team coach.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X