For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'என்ன என்ன பேச்சு பேசுன..'ப்ளே ஆப்-க்கு தகுதிபெறவே முட்டிமோதும் மும்பை..வைச்சு செய்யும் நெட்டிசன்கள்

துபாய்: நடப்பு சாம்பியனாக உள்ள மும்பை அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறவே முட்டி மோதிக் கொண்டு இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ள மும்பை, இனி ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவது சிரமம்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதலில் இந்தியாவில் தொடங்கியது. மே 4ஆம் தேதி வரை இந்தியாவில் மொத்தம் 31 லீக் போட்டிகள் நடைபெற்றன.

அட, சே.. அப்பா அவுட் ஆன விரக்தி.. சேரை போட்டு தாக்கிய மகன்.. ஆனால் அடுத்த நொடி செம.. க்யூட் வீடியோஅட, சே.. அப்பா அவுட் ஆன விரக்தி.. சேரை போட்டு தாக்கிய மகன்.. ஆனால் அடுத்த நொடி செம.. க்யூட் வீடியோ

அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் போட்டிகளில் நடப்பு சாம்பியனான மும்பை அணி இந்த ஆண்டு லீக் சுற்றிலேயே திணறி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை மும்பை அணி மொத்தம் 10 போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே மும்பை அணி வென்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற 7 லீக் போட்டிகளில் 4இல் மும்பை வென்று இருந்தது. ஆனால், ஐக்கிய அமீரகத்தில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

துபாயில் கடந்த செப். 19ஆம் தேதி மும்பை அணி சென்னை அணியை எதிர்கொண்டது. அதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த செப். 23ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை களமிறங்கியது. இந்த போட்டியில் மும்பை பவுலர்கள் அனைவரும் சொதப்பக் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல நேற்று நடைபெற்ற போட்டியிலும் பெங்களூரு அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்வி அடைந்தது. 10 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள மும்பை அணி இப்போது புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

ரன்ரேட் படுமோசம்

ரன்ரேட் படுமோசம்

தொடர்ந்து மோசமான தோல்வியைச் சந்தித்து வருவதால் அணியின் நெட் ரன்ரேட்டும் மோசான நிலையில் உள்ளது. தற்போது மும்பை அணியின் நெட் ரன்ரேட் -0.551ஆக உள்ளது. இதுவும் மும்பை அணிக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. ஏனென்றால் இப்போது புள்ளிப் பட்டியலில் 8 வெற்றிகளைப் பெற்றுள்ள சென்னை மற்றும் டெல்லி அணிகள் 16 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளது. தொடர்ந்து பெங்களூரு அணி 6 வெற்றிகளைப் பெற்று, 12 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், 4ஆம் இடத்திற்குத் தான் மிகவும் கடுமையான போட்டி நிலவுகிறது.

Recommended Video

Chahal's Send-off to Ishan Kishan in MI vs RCB Match | IPL 2021 | OneIndia Tamil
7ஆவது இடம்

7ஆவது இடம்

ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற 4ஆம் இடத்திற்குக் கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த 4 அணிகளும் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும் நெட் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா 4ஆவது இடத்திலும், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் 5 மற்றும் 6ஆவது இடத்திலும் உள்ளது. மும்பை அணியின் ரன்ரேட் மிக மோசமாக உள்ளதால் அந்த அணி 7ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

எங்குப் பிரச்சினை

எங்குப் பிரச்சினை

கடந்த சில போட்டிகளாகவே மும்பை அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்தாலும் கூட, அந்த அணியின் மிட்டில் ஆர்டர் தொடர்ந்து சொதப்பி வருகிறது. சூர்யா குமார் யாதவ் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் ஒற்றை இலக்கிலேயே வெளியேறியுள்ளார். கடந்த ஆண்டு மும்பை அணிக்காக டாப் ஸ்கோரராக இருந்த இஷான் கிஷன், கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் முறையே 14, 11, 9 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். குர்னல் பாண்டியா பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

கடந்த வருடம்

கடந்த வருடம்

இப்படித் தொடர் சொதப்பல் காரணமாக மும்பை அணி தொடர்ந்து மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி 9 வெற்றிகளுடன் லீக் சுற்றில் முதல் இடத்தை பெற்று ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றது. அதேநேரம் போன வருடம் சென்னை அணி 6 வெற்றிகளுடன் 7ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. 13 ஆண்டுகளில் சென்னை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது கடந்த ஆண்டு தான் முதல் முறை.

தக்க பதிலடி

தக்க பதிலடி

ஆனால் அதற்கே மும்பை அணி ரசிகர்கள் ஓவராக ஆட்டம் போட்டார்கள். தோனி அவ்வளவு தான், சென்னை அணிக்கு வரும் ஆண்டுகளிலும் இதே நிலைத்தான் தொடரும் என்று கலாய்த்துத் தள்ளினர். இப்போது ஓரே ஆண்டில் நிலைமை தலைகீழ். சென்னை இருந்த நிலையில் மும்பையும், மும்பை இருந்த நிலையில் இப்போது சென்னையும் உள்ளது. கடந்த ஆண்டு ஓவராக ஆட்டம் போட்ட மும்பை ரசிகர்களுக்குச் சென்னை ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் ட்விட்டர் முழுக்க இப்போது சிஎஸ்கே vs எம்ஐ ரசிகர்களின் சண்டை தான் ட்ரெண்டிங்!

மும்பை

மும்பை

அதேநேரம் களத்தில் மும்பை அணியின் போட்டிங். பவுலிங் என இரண்டு இதுவரை ஜொலிக்கவில்லை. இதனால் தான் மும்பை அணி தொடர்ந்து மோசமான தோற்று வருகிறது. மும்பைக்கு அணிக்கு லீக் சுற்றில் இன்னும் 4 போட்டிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் நடப்பு சாம்பியனான மும்பை, லீக் சுற்றுடன் நடையைக் கட்ட வேண்டியது உறுதி!

Story first published: Monday, September 27, 2021, 17:55 [IST]
Other articles published on Sep 27, 2021
English summary
MI is struggling to come out from the bottom of the table. Mumbai has lost all last three matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X