புஜாராவுக்கு திடீர் ஓப்பனிங் வாய்ப்பு ஏன்? புதிய பொறுப்பு தந்தாரா டிராவிட்

மும்பை: இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முதல் இன்னிங்சில் இந்தியா 325 ரன்கள் எடுத்த நிலையில், நியூசிலாந்து 62 ரன்களில் சுருண்டது. இந்த நிலையில், ஃபாலோ ஆன் தராமல் இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்தது.

இதில் யாரும் எதிர்பாராத வகையில், புஜாரா தொடக்க வீரராக மாயங் அகர்வாலுடன் களமிறங்கினார்.

என்ன மனுசன்யா விராட் கோலி..!! மும்பை டெஸ்டில் ஆச்சரியம்.!!என்ன மனுசன்யா விராட் கோலி..!! மும்பை டெஸ்டில் ஆச்சரியம்.!!

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், பேட்டிங் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாயங் அகர்வால் மற்றும் புஜாரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து விரர்கள் ஓய்வின்றி பந்துவீசி வருவதால் , அவர்களின் பந்துவீச்சு எடுப்படவில்லை.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

இதனால் புஜாரா மற்றும் மாயங் அகர்வால் ஜோடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. சிறப்பாக விளையாடிய அகர்வால் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.புஜாரா 97 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

புதிய பொறுப்பு

புதிய பொறுப்பு

கடைசியாக 2019 ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே புஜாரா சதம் விளாசினார். அதன் பின் 39 இன்னிங்சாக புஜாரா சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார்.சொந்த மண்ணில் அவர் சதம் விளாசி 20 இன்னிங்ஸ் ஆகிறது.2021ஆம் ஆண்டு புஜாரா24 இன்னிங்சில் விளையாடி 686 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

மறுப்பு

மறுப்பு

இதனால் புஜாராவுக்கு தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கப்பட்டதா என கேள்வி எழுந்தது. ஆனால் சுப்மான் கில்லுக்கு காயம் ஏற்பட்டதால் தான் புஜாரா, தொடக்க வீரராக களமிறங்கியதாகவும், அவரது இடத்தை அணி நிர்வாகம் மாற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The 2nd Test between India and New Zealand is being played in Mumbai. The Indian team is dominating. Pujara opened the innings with Mayang Agarwal. Shubman Gill's injured is the main reason for Pujara's opening.
Story first published: Sunday, December 5, 2021, 13:09 [IST]
Other articles published on Dec 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X