துபாயில் மினி ஐ.பி.எல்…? புதிய அணிகளை வாங்கிய மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

துபாய்; கிரிக்கெட் உலகில் மிகவும் பணக்கார தொடராக கருதப்படுவது ஐ.பி.எல். தான்.. ஆண்டுதோறும் ஆயிரம் கோடி கணக்கில் ஐ.பி.எல். மூலம் பி.சி.சி.ஐ வருமானம் ஈட்டி வருகிறது.

Mumbai, KKR buy teams in the Emirates T20 League | OneIndia Tamil

இதனை பார்த்து மற்ற நாடுகளும் ஐ.பி.எல். டி-20 போட்டியை போன்று கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டது. இதில் சில நாடுகள் வெற்றியும் கண்டன

அந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகைஅந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகை

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாக வைத்து புதிய இருபது ஓவர் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு ஐ.சி.சி. அனுமதியும் கிடைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ஐ,பி.எல். பாணியில் இந்த தொடரை நடத்த திட்டமிட்ட அமீரக கிரிக்கெட் வாரியம், அணிகளை ஐ.பி.எல். அணிகளுக்கு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, அந்த தொடரில் புதிய அணியை வாங்கியது. இந்த தொடரிலும், ஊர் பெயருடன் இந்தியன்ஸ் என்று இணைத்து அணிக்கு பெயர் சூட்டப்பட உள்ளது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஏற்கனவே கே.கே.ஆர். அணி மேற்கிந்தியத் தீவுகளின் நடைபெறும் சி.பி.எல்.தொடரில் ஒரு அணியை வாங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த நிலையில் புதிய தொடரிலும் ஒரு அணியை ஷாரூக்கான் வாங்கியுள்ளார். இதே போன்று டெல்லி கேப்டல்ஸ் அணியும் ஒரு அணியை வாங்கியுள்ளது. மான்செஸ்டர் யுனைடட் அணி நிர்வாகமும், அமீரக கிரிக்கெட் தொடரில் முதலீடு செய்துள்ளது

பின்வாங்கிய சி.எஸ்.கே

பின்வாங்கிய சி.எஸ்.கே

உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதால், அமீரக கிரிக்கெட் வாரியம் புதிய அணியை வாங்கி கொள்ள சி.எஸ்.கே. விற்கும் அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று கொண்டு அணி வாங்கம் நடவடிக்கையில் சி.எஸ்.கே.வும் ஈடுபட்டது. ஆனால், கடைசி நேரத்தில் முதலீடு செய்ய விருப்பமில்லை என்று கூறி சி.எஸ்.கே. நிர்வாகம் வெளியேறியது.

இந்திய வீரர்களுக்கு அனுமதி

இந்திய வீரர்களுக்கு அனுமதி

உலகம் முழுவதும் பல்வேறு டி20 தொடர்கள் நடந்தாலும் அதில் இந்திய வீரர்கள் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி அளிப்பதில்லை. ஆனால் அமீரக கிரிக்கெட் உடன் பி.சி.சி.ஐ. நல்ல உறவில் உள்ளது. மேலும் ஐ.பி.எல். தொடர்களை அமீரக கிரிக்கெட் வாரியம் துபாயில் நடத்த உதவியும் செய்தது. இதனால் புதிய தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐ.பி.எல். அணிகள் இந்த தொடரில் புதிய அணிகளை வாங்கியதால் இந்திய வீரர்கள் புதிய தொடரில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Emirates cricket board organised new tournament. Mumbai Indians. KKR. DC bought the new teams. BCCI May allow Indian Players to Participate in it
Story first published: Friday, November 19, 2021, 14:28 [IST]
Other articles published on Nov 19, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X