For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இமாலய வெற்றி.. நம்பர் 1 இடத்தை பிடித்த நியூசிலாந்து.. மரண அடி வாங்கிய பாக்.!

வெல்லிங்க்டன் : நியூசிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்து இந்த சாதனையை செய்தது.

அடுத்தடுத்து அடுக்கி வைத்த குக்கீஸ்... அழகான தந்தை -மகள் கூட்டணி... ஜிவாவுடன் விளம்பரத்தில் தோனி! அடுத்தடுத்து அடுக்கி வைத்த குக்கீஸ்... அழகான தந்தை -மகள் கூட்டணி... ஜிவாவுடன் விளம்பரத்தில் தோனி!

கடந்த பத்து ஆண்டுகளில் ஆறாவது அணியாக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது நியூசிலாந்து.

கடைசி டெஸ்ட்

கடைசி டெஸ்ட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி ஆடியது. முதல் டெஸ்டில் வென்ற நிலையில், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 297 ரன்கள் எடுத்தது.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 659 ரன்கள் குவித்து மிரட்டியது. கேப்டன் கேன் வில்லியம்சன் 238 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 157 ரன்களும் குவித்தனர். டேரில் மிட்செல் அதிரடி ஆட்டம் ஆடி 112 பந்துகளில் 102 ரன்கள் குவித்து இருந்தார்.

இன்னிங்க்ஸ் வெற்றி

இன்னிங்க்ஸ் வெற்றி

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 186 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதை அடுத்து நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 186 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதை அடுத்து நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

முதல் இடம்

முதல் இடம்

இந்த வெற்றி மூலம் ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இரண்டு புள்ளிகள் கூடுதலாக பெற்று 118 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

நெருங்கும் நியூசிலாந்து

நெருங்கும் நியூசிலாந்து

இங்கிலாந்து அணி 106 புள்ளிகளும், தென்னாப்பிரிக்கா 96 புள்ளிகளும் பெற்று நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் நியூசிலாந்து அணி 70 சதவீத புள்ளிகளுடன், ஆஸ்திரேலியா, இந்தியாவை நெருங்கி உள்ளது.

Story first published: Wednesday, January 6, 2021, 16:48 [IST]
Other articles published on Jan 6, 2021
English summary
New Zealand become number 1 test team in the world after beating Pakistan an innings and 176 runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X