For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசி. பவுலர் போல்ட் ஹாட்ரிக்..! ஆஸி.யை கலங்கடித்த 50வது ஓவர்.. 243 ரன்கள் குவிப்பு

லார்ட்ஸ்: நியூசி. வீரர் போல்ட் 50வது ஓவரில் ஹாட்ரிக் எடுக்க, ஆஸி. 9 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை எடுத்துள்ளது.

கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் உலக கோப்பையின் முக்கிய போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின.

ஆஸி. ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆகையால், நியூசி.க்கு இது முக்கிய போட்டியாகும். டாசில் வென்ற ஆஸி. முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. ஆனால், அந்த முடிவை ஏன் எடுத்தோம் என்பது நியூசி. பந்துவீச்சில் உணர்ந்து கொண்டது.

விக். விழுந்தன

விக். விழுந்தன

தொடக்கம் முதலே, பவுலிங் மூலம் ஆஸி. அணியின் ரன் குவிப்பை கட்டுப் படுத்திய நியூசி. விக்கெட்டுகளை அள்ளியது. அணியின் ஸ்கோர் 15 ஆக இருக்கும் போது பின்ச் ஆட்டமிழந்தார். அதன் பிறகு, பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட வார்னர் 16 ரன்கள் தான் எடுத்தார்.

அசத்தல் பவுலிங்

அசத்தல் பவுலிங்

ஸ்மித், ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல் என யாரும் நிலைக்கவில்லை. இதில் மேக்ஸ்வெல் டக் அவுட். நியூசி.யின் துல்லிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸி. திணறியது அப்பட்டமாக தெரிந்தது. 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

6வது விக். ஜோடி

6வது விக். ஜோடி

அதை தடுக்க ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. இதையடுத்து, களத்தில் கவாஜாவும், கேரியும் நிலைத்து நின்று ஆடினர். 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவர்களை பிரிக்க முடியவில்லை. கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு அடித்தனர்.

இருவரும் அரைசதம்

இருவரும் அரைசதம்

ஒன்று, இரண்டு என ரன்களை மெதுவாக இருவரும் சேர்த்து அரைசதம் கடந்தனர். அவர்களை பிரிக்க நியூசி. பவுலர்கள் முயன்றும் முடியவில்லை. அணியின் ஸ்கோர் 199 ரன்களை எட்டிய போது தான் நியூசிலாந்து நினைத்தது நடந்தது.

107 ரன்கள் சேர்ப்பு

107 ரன்கள் சேர்ப்பு

43வது ஓவரில் கேரி அவுட்டானார். அவர் 71 ரன்கள் எடுத்தார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 107 ரன்கள் சேர்த்தது. அதற்கு முன்னதாக பல முறை அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இறுதிக்கட்டத்தில் ஆஸி. அடித்து ஆட முற்பட்டது.

கவாஜா காலி

கவாஜா காலி

200 ரன்களை எட்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 250 ரன்களை நோக்கி நகர தொடங்கியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவாஜா 88 ரன்களில் ஆட்டமிழந்தார். யாரும் எதிர்பாராத வகையில் 50வது ஓவரில் திருப்பம் ஏற்பட்டது.

ஹாட்ரிக் விக்.

ஹாட்ரிக் விக்.

அந்த ஓவரை வீசினார் போல்ட். அந்த ஓவரின் 3வது பந்தில் கவாஜா காலியானார். அடுத்து வந்த ஸ்டார்க் போல்டு. 2 பந்துகளில் 2 விக்கெட்டுகள். ஹாட்ரிக் எடுப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த பந்தை எதிர்கொண்ட பெஹண்டரப் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற... ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்தார் போல்ட். முடிவில் ஆஸி. 50 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்தது.

Story first published: Saturday, June 29, 2019, 22:34 [IST]
Other articles published on Jun 29, 2019
English summary
Newzealand bowler boult took hat trick wicket against Australia in world cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X