For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பையில் இப்படி இருக்காது? இந்தியாவுக்கு சாண்ட்னர் மறைமுக வார்னிங்.. பிட்ச்-ஆல் தான் ஆபத்தா?

அகமதாபாத்: இந்தியா அணிக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்துள்ள சூழலில் அதன் கேப்டன் மிட்செல் சாண்டனர் பிட்ச்-ல் ஏற்படும் மாற்றம் குறித்து மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. அகமதாபாத்தில் நடந்த கடைசி போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 126 ரன்களையும், ராகுல் திரிபாதி 44 ரன்களையும் விளாசினர்.

54 பந்துகளில் சுப்மன் கில் சதம்.. நியூசி. பந்துவீச்சை சிதறடித்த இந்தியா.. இமாலய இலக்கு நிர்ணயம் 54 பந்துகளில் சுப்மன் கில் சதம்.. நியூசி. பந்துவீச்சை சிதறடித்த இந்தியா.. இமாலய இலக்கு நிர்ணயம்

3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 66 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்து படு மோசமாக தோற்றது. இதன் மூலம் 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் இந்தியா கைப்பற்றியது. இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 13வது முறையாக டி20 தொடரை கைப்பற்றி யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் வலம் வருகிறார்கள்.

சாண்ட்னர் எச்சரிக்கை

சாண்ட்னர் எச்சரிக்கை

இந்நிலையில் இதுகுறித்து எதிரணி கேப்டன் சாண்ட்னர் எச்சரித்துள்ளார். அதில், இது ஏமாற்றம் தான். ஆனால் இந்தியாவுக்கு பாராட்டு கூறியே ஆக வேண்டும். இந்திய வீரர்களில் சிலர் சரியான நேரத்தில் சரியான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். பவர் ப்ளேவிலேயே 5 விக்கெட்களை இழந்த பிறகு வெற்றி பாதைக்கு செல்வது கடினம் ஆகும். இந்திய அணி முதல் சில ஓவர்களுக்கு நிதானமாக நேரம் எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் அதிரடி காட்டினர்.

உலகக்கோப்பை எச்சரிக்கை

உலகக்கோப்பை எச்சரிக்கை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் நேரத்தில் இந்தியாவில் நிறைய பனிப்பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். அப்போது டாஸ் வெல்லும் அனைத்து அணிகளுமே பந்துவீச்சை தான் தேர்வு செய்வாரகள். இந்தியாவில் சிறப்பான பிட்ச்-களை நாங்கள் பார்த்தோம். உலகக்கோப்பை நடக்கும் அக்டோபர் மாதமும் இதே போல இருந்தால் நன்றாக இருக்கும். அப்போது 400 ரன்களுக்கெல்லாம் செல்லாது, 320 ரன்களுக்குள் முடிந்தவரை சுருட்டிவிடுவோம் என சாண்ட்னர் கூறியுள்ளார்.

அடுத்த தொடர் எப்போது?

அடுத்த தொடர் எப்போது?

இந்திய அணிக்கு அடுத்ததாக ஜூன் மாத சூழலில் தான் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரவுள்ளது. அடுத்தகாக ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இது பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்பின் ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என ஜூன் மாதத்தின் இறுதி வரை வேறு வடிவ போட்டிகள் உள்ளன.

Story first published: Thursday, February 2, 2023, 10:40 [IST]
Other articles published on Feb 2, 2023
English summary
New Zealand captain Mitchell santner sends warning to Team India after lost the ODI and T20 Cricket series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X