என்ன ஆச்சு.. ஏன் இந்த முடிவு? நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர் இல்லை - இந்தியாவுக்கு ஜாலி தான்!

ஜெய்ப்பூர்; ஐ.சி.சி. டி-20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனால் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி, கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.உலகக் கோப்பை தொடர் முடிந்த 2 நாட்களிலேயே இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி பங்கேற்கிறது.

டி-20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற அதே அணி தான் இந்த தொடரிலும் பங்கேற்கும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது

இந்த நிலையில், நியூசிலாந்து டி-20 அணியில் ஒரு முக்கிய மாற்றத்தை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது.

டி20 இறுதிப் போட்டி.. தடுமாறிய நியூசிலாந்து.. தனியொரு நபராக தூக்கி நிறுத்திய கேன் வில்லியம்சன்டி20 இறுதிப் போட்டி.. தடுமாறிய நியூசிலாந்து.. தனியொரு நபராக தூக்கி நிறுத்திய கேன் வில்லியம்சன்

வில்லியம்சன் இல்லை

வில்லியம்சன் இல்லை

இடைவெளியின்றி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் கேப்டன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சனுக்கு மாற்றாக வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதி அணியை வழி நடத்த உள்ளார்.

டெஸ்ட்டில் கவனம்

டெஸ்ட்டில் கவனம்

டி-20 போட்டியில் விளையாடவில்லை என்றாலும், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக டெஸ்ட் அணியுடன் சேர்ந்து வில்லியம்சன் பயிற்சியில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே இந்தியா வந்தடைந்த நியூசிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள் ஜெய்ப்பூரில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்தியாவுக்கு மகிழ்ச்சி

இந்தியாவுக்கு மகிழ்ச்சி

நியூசிலாந்து டி-20 அணியிலிருந்து வில்லியம்சன் வெளியேறியதால் மாற்று வீரரை நியூசிலாந்து அணி இதுவரை அறிவிக்கவில்லை. டி-20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர் வில்லியம்சன். இறுதிப் போட்டியில் கூட தனி ஆளாக நின்று அசத்தியவர். சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் கில்லாடி. பெளல்ட் டி-20 போட்டியிலிருந்து விலகிய நிலையில், வில்லியம்சனும் இல்லாதது இந்திய அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Williamson to miss India T20Is, Southee to lead | OneIndia Tamil
டெஸ்ட் அணியில் மாற்றம்

டெஸ்ட் அணியில் மாற்றம்

இதனிடையே, நியூசிலாந்து வீரர் கான்வே காயம் காரணமாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக டேரல் மிட்செல் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
NZ captain Williamson to ruled out from India T20 series, fast bowler Tim southee to lead the team
Story first published: Tuesday, November 16, 2021, 14:28 [IST]
Other articles published on Nov 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X