For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசிலாந்து அணி சிறந்தவர் கைகளில் உள்ளது... கேன் வில்லியம்சனுக்கு விராட் ஆதரவு

Recommended Video

நியூசிலாந்து சிறந்தவர் கைகளில் உள்ளது... வில்லியம்சனுக்கு கோலி ஆதரவு

மவுண்ட் மாங்கானுய் : நியூசிலாந்து அணி சிறந்தவர் தலைமையில் உள்ளதாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியா -நியூசிலாந்து இடையில் நடந்து முடிந்துள்ள சர்வதேச டி20 தொடரை 5க்கு 0 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை புரிந்துள்ள நிலையில் விராட் கோலி இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி 3க்கு 0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ள நிலையில், கேன் வில்லியம்சனின் கேப்டன் பொறுப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது விராட் கோலி கேன் வில்லியம்சனுக்கு ஆதரவுதெரிவித்துள்ளார்.

தானும் கேன் வில்லியம்சனும் ஒரே மாதிரியான மனநிலையையும் கருத்துக்களையும் கொண்டுள்ளதாகவும் விராட் கோலி மேலும் குறிப்பிட்டார். உலகின் இருவேறு பகுதிகளில் உள்ள தங்கள் இருவருக்கும் இத்தகைய ஒற்றுமை உள்ளது தனக்கு வியப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா -நியூசிலாந்து டி20 தொடர்

இந்தியா -நியூசிலாந்து டி20 தொடர்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சர்வதேச டி20 தொடர், சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் மோதுகிறது. முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரின் ஐந்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, இதுவரை எந்த அணியும் மேற்கொள்ளாத புதிய சாதனையை படைத்துள்ளது.

விராட்டுக்கு ஓய்வு

விராட்டுக்கு ஓய்வு

மவுண்ட் மாங்கானுய் பகுதியில் நேற்று நடைபெற்ற 5வது டி20 போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்ட நிலையில், 60 ரன்கள் அடித்தபோது அவரும் காயம் காரணமாக இடையிலேயே பெவிலியனுக்கு திரும்ப நேரிட்டது. இதையடுத்து கே.எல். ராகுல் தலைமையில் இந்திய அணி போட்டியை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி பாராட்டு

விராட் கோலி பாராட்டு

இந்நிலையில் கேன் வில்லியம்சன் மிகச்சிறந்த வீரர் என்றும் நியூசிலாந்து அணி மிகச்சிறந்தவர் கைகளில் உள்ளதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். தனக்கும் கேன் வில்லியம்சனுக்கும் ஒரே மாதிரியான மனநிலை மற்றும் கொள்கைகள் உள்ளதாக பெருமை தெரிவித்த அவர், உலகின் இரண்டு மூலைகளில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற ஒற்றுமை உள்ளது குறித்து தான் வியப்படைவதாகவும் தெரிவித்தார்.

கேப்டன் பதவி குறித்து கேள்வி

கேப்டன் பதவி குறித்து கேள்வி

முன்னதாக அஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் மோதிய நியூசிலாந்து 3க்கு 0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து கேன் வில்லியம்சனின் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுந்தது. இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்ட நிலையில் தற்போது கேன் வில்லியம்சன் குறித்து விராட் கோலி தனது ஆதரவு கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

கேன் வில்லியம்சன் திட்டவட்டம்

கேன் வில்லியம்சன் திட்டவட்டம்

இதனிடையே தன்னுடைய அணியின் நலனுக்காக தான் பதவி விலகவும் தயாராக உள்ளதாக கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அணியின் நலனை கருத்தில் கொண்டு அடுத்தகட்டமாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் தனிப்பட்டவர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, February 3, 2020, 11:28 [IST]
Other articles published on Feb 3, 2020
English summary
Indian captain said the two cricketers have a "similar mindset"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X