For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எவ்வளவு ரன் அடிச்சோம்னே தெரியலையே! கண்ணுமண்ணு தெரியாமல் ரன் அடித்து உலக சாதனை

ஹாமில்டன் : நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் லிஸ்ட் "ஏ" கிரிக்கெட் போட்டிகளில் ஒரு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுப்பதில் தான் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்காக ஆடிய இரண்டு வீரர்கள் ஒரே ஓவரில் 43 ரன்கள் குவித்துள்ளனர்.

இது லிஸ்ட் "ஏ" எனப்படும் உள்ளூர் மற்றும் உலக அளவிலான ஒருநாள் போட்டிகள் இடையே ஒரு ஓவரில் எடுத்த அதிகமான ரன்கள் ஆகும்.

எந்த போட்டியில் சாதனை?

எந்த போட்டியில் சாதனை?

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் மற்றும் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் மோதிய ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியின் ஜோ கார்ட்டர் மற்றும் ப்ரெட் ஹாம்ப்டன் இணைந்து சிறப்பாக ஆடி வந்தனர்.

43 ரன்கள் எப்படி வந்தது?

அந்த இன்னிங்க்ஸின் 46வது ஓவரை வில்லெம் லூடிக் என்ற பந்துவீச்சாளர் வீசினார். அதுவரை கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்த லூடிக், 46வது ஓவரில் மட்டும் 43 ரன்கள் கொடுத்தார். அந்த ஓவரில் இரண்டு நோ பால்களும் வீசி சொதப்பினார். ஆறு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, ஒரு சிங்கிள் ரன் மற்றும் இரண்டு நோ பால் என மொத்தமாக 43 ரன்கள் எடுத்தனர் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் வீரர்கள். 46வது ஓவர் ரன்கள் - (4, 6 (+1 நோ பால்), 6 (+1 நோ பால்), 6, 1, 6, 6, 6)

இதுவரை 39 தான் அதிகம்

இதுவரை 39 தான் அதிகம்

முன்னதாக, லிஸ்ட் "ஏ" வரலாற்றில் ஜிம்பாப்வே அணியின் எல்டான் சிகும்புரா ஒரே ஓவரில் 39 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது. அந்த சாதனையை இந்த வீரர்கள் இணைந்து முறியடித்துள்ளனர்.

எவ்வளவு ரன்கள் அடிச்சோம்?

எவ்வளவு ரன்கள் அடிச்சோம்?

போட்டிக்கு பின் பேசிய ஜோ மற்றும் ஹாம்ப்டன், "இன்னிங்க்ஸின் இறுதி என்பதால் அப்படி தான் ஆட வேண்டும் என முடிவு செய்து ஆடினோம். அந்த ஓவர் முடிந்த உடன் நாங்கள் இருவரும் எவ்வளவு ரன் அடித்திருப்போம் என பேசிக் கொண்டோம். நாங்கள் 39 ரன்கள் எடுத்தோம் என நினைத்துக் கொண்டு இருந்தோம். ஒரு பவுண்டரியை மறந்து விட்டோம்" எனக் கூறினர்.

Story first published: Thursday, November 8, 2018, 18:46 [IST]
Other articles published on Nov 8, 2018
English summary
New Zealand cricketers broken the List A world record for most runs in an over
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X