For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேற்கிந்திய தீவுகளை ஓட ஓட விரட்டிய நியூசிலாந்து... முதல் டெஸ்ட்டில் அபார இன்னிங்ஸ் வெற்றி!

ஹாமில்டன் : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் ஆடிய டி20 தொடரை நியூசிலாந்து அணியிடம் இழந்துள்ளது.

இதையடுத்து டெஸ்ட் தொடர் துவங்கிய நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் 134 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது நியூசிலாந்து.

போட்டியில் 519 ரன்களை குவித்த நிலையில், தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 1க்கு 0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகித்து வருகிறது.

இன்னிங்ஸ் வெற்றி

இன்னிங்ஸ் வெற்றி

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் ஆடிய டி20 தொடரை கைநழுவியுள்ளது. இதையடுத்து 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கி முதல் போட்டியில் 134 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது நியூசிலாந்து அணி.

வில்லியம்சன் இரட்டை சதம்

வில்லியம்சன் இரட்டை சதம்

இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, 519 ரன்களை குவித்தது. கேப்டன் கேன் வில்லியம்சனின் இரட்டை சதம் அணியின் இந்த இமாலய ஸ்கோருக்கு வழிவகுத்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்த இலக்கை எட்ட முடியவில்லை.

பிளாக்வுட், அல்சாரி சிறப்பு

பிளாக்வுட், அல்சாரி சிறப்பு

அடுத்தடுத்த இரண்டு இன்னிங்சிலும் 247 மற்றும் 138 ரன்களை மட்டுமே மேற்கிந்திய தீவுகள் அணியால் எடுக்க முடிந்தது. அந்த அணியின் வீரர்கள், நியூசிலாந்து பௌலர்களின் எதிரில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் திணறினர். அந்த அணியின் பிளாக்வுட் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 104 மற்றும் 89 ரன்களை அடித்து அணிக்கு ஆறுதல் அளித்தனர்.

நியூசிலாந்து அபாரம்

நியூசிலாந்து அபாரம்

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் 14 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் அதன் புள்ளிகள் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டிக்கு பிறகு பாகிஸ்தானுடனான தொடர்களிலும் நியூசிலாந்து மோதவுள்ளது.

Story first published: Sunday, December 6, 2020, 12:51 [IST]
Other articles published on Dec 6, 2020
English summary
The latest victory extended New Zealand's unbeaten home streak to an impressive 14 Tests
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X