For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரக ரகமா அடிப்பாரே.. நியூஸி., ரசிகர்கள் வெறுக்கும்.. "ஒரே" இந்திய வீரர் - WTC Final "அலப்பறை"

மும்பை: நியூசிலாந்து ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட இந்திய வீரரை மட்டும் டார்கெட் செய்து, சமூக தளங்களில் விவாதிப்பதை காண முடிகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது.

அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாத லாங் சீரிஸ் என்பதால், ரசிகர்கள் இங்கிலாந்து டூருக்கு ஏக குஷியில் காத்திருக்கின்றனர்.

 சிம்ம சொப்பனம்

சிம்ம சொப்பனம்

எனினும், இந்திய அணிக்கு இது நிச்சயம் அவ்வளவு இலகுவான தொடராக இருக்க வாய்ப்பில்லை. முரட்டு சவால்களை சந்திக்க நேரிடும். அதேசமயம், நியூசிலாந்து ரசிகர்கள் இந்திய வீரர் ரிஷப் பண்ட் குறித்து சமூக தளங்களில் அதிகம் விவாதிக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அஞ்சுகிறார்கள். அவர் நியூசிலாந்தின் வெற்றி வாய்ப்பை தடுப்பதில் சிம்ம சொப்பனாக இருப்பார் என்று விவாதிக்கிறார்கள். இதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.

 கன்ஃபார்ம் அடி இருக்கு

கன்ஃபார்ம் அடி இருக்கு

கடந்த டிசம்பர் - ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், 2 - 1 என்று இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரிஷப் பண்ட். இந்திய அணியில் 6வது வீரராக களமிறங்கி சிக்ஸர், பவுண்டரி என சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளுகிறார். அப்போது எந்த பவுலராலும் இவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக 'Gabba' டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்கு 328 என்ற டார்கெட் நிர்ணயிக்கப்பட்ட போது, ஆஸ்திரேலியாவுக்கே வெற்றி என்று நிபுணர்கள் கணிக்க, 6வது வீரராக களமிறங்கி, 89 ரன்கள் விளாசி, நாட் அவுட்டாக நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

 ஆட்டம் கட்டுக்குள்

ஆட்டம் கட்டுக்குள்

தனது ஆக்ரோஷமான அதே ஃபார்மை, அதன் பிறகு இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், பண்ட் அப்படியே வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் களமிறங்கும் வரை எதிரணி கையில் இருக்கும் மேட்சுகள், அவர் களமிறங்கிய பின் மெல்ல மெல்ல கையைவிட்டுச் சென்றுவிடுவதே, அவர் மீதான அச்சத்தின் காரணம். இரண்டு சிக்ஸ் அடித்துவிட்டு அவுட்டாகி தலையை தொங்கப்போட்டு செல்லாமல், நின்று விளாசுவதால் ஆட்டத்தை இந்திய அணியின் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறார்.

 ஆனா இவர் கஷ்டம்

ஆனா இவர் கஷ்டம்

இப்படி, ஆஸ்திரேலிய மண்ணிலேயே, அந்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர்களையும், ஸ்பின் பவுலர்களையும் கைமா செய்து, இந்திய மண்ணிலும் ஆதிக்கம் செலுத்தி, 'எங்க இறக்கிவிட்டாலும் அடிப்பேன் டா' என்று சொல்லாமல் சொன்ன ரிஷப் பண்ட், இங்கிலாந்து பிட்சில் தங்கள் அணியின் பவுலர்களையும் திறம்பட சமாளித்துவிடுவார் என்பதே நியூஸி., ரசிகர்கள் பலரின் கவலை. ரோஹித், கோலி போன்றோரை கூட டிரெண்ட் போல்ட்டின் ஸ்விங்கில் அவுட் செய்துவிடலா. ஆனால், இவர் லோ ஆர்டரில் இறங்கி பெரும் தலைவலி கொடுப்பாரே என்று புலம்புகின்றனர்.

Story first published: Friday, May 28, 2021, 19:53 [IST]
Other articles published on May 28, 2021
English summary
NZ fans don't want this batsman wtc final - ரிஷப் பண்ட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X