For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒண்ணு இல்ல எட்டு... பாகிஸ்தான் பயிற்சிக்கு அனுமதி மறுப்பு... நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிரடி!

கிறிஸ்ட் சர்ச் : நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் வரும் 18ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

இதையொட்டி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் குவாரன்டைனில் உள்ள பாகிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நியூசிலாந்தில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாகிஸ்தான் வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள அந்நாட்டின் சுகாதாரத்துறை அனுமதி மறுத்துள்ளது.

8 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா

8 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர்களில் விளையாட பாகிஸ்தான் அணி அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கிறிஸ்ட் சர்ச்சில் குவாரன்டைனில் பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபட்டநிலையில் அவர்களில் 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.

பல்வேறு கெடுபிடிகள்

பல்வேறு கெடுபிடிகள்

கொரோனா காரணமாக நியூசிலாந்து நாட்டில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆரம்பம் முதலே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கொரோனா பாதிப்புகள் அந்த நாட்டில் 2000க்கும் கீழ் உள்ளது. தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

நியூசிலாந்து குற்றச்சாட்டு

நியூசிலாந்து குற்றச்சாட்டு

இந்நிலையில பாகிஸ்தான் வீரர்கள் விதிமுறைகளை மதித்து நடக்கவில்லை என்றும் தொடர்ந்து அவர்களுக்கு இடைவெளிகளில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்த நியூசிலாந்து சுகாதாரத்துறை தொடர்ந்து ஹோட்டல் அறைகளிலேயே அவர்கள் தங்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

நியூசிலாந்து எச்சரிக்கை

நியூசிலாந்து எச்சரிக்கை

இதனிடையே, தொடர்ந்து விதிமுறைகளை மீறி நடந்து கொண்டால், தொடர் கேன்சல் செய்யப்படும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பான சூழல் நிலவியது. முன்னாள் பாகிஸ்தான் வீரர் அக்தர் உள்ளிட்டோர் இந்த எச்சரிக்கைக்கு கண்டனம் விதித்திருந்தனர்.

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

இந்நிலையில் குவாரன்டைனை முடித்த நிலையிலும் பாகிஸ்தான் வீரர்கள் கிரிககெட் பயிற்சிகளை மேற்கொள்ள நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர்களிடையே தொடர்ந்து கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதாகவும் தற்போது பயிற்சிக்கு அனுமதி கொடுத்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

அடுத்தக்கட்ட நடவடிக்கை

தற்போது எடுக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிககையில் கூறப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி இரு அணிகளுக்கிடையில் முதல் டி20 போட்டி துவங்கவுள்ளது. அதேபோல 26ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இந்த போட்டிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சேர்க்கப்பட உள்ளது.

Story first published: Friday, December 4, 2020, 12:52 [IST]
Other articles published on Dec 4, 2020
English summary
There have been a number of active cases identified among the team -Health Ministry
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X