For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கை-நியூசிலாந்து 'பாக்சிங் டே' டெஸ்ட்.. செம "குத்து" விட்ட மெக்கல்லம்!

By Veera Kumar

கிறைஸ்ட்சர்ச்: இலங்கைக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 134 பந்துகளில் 195 ரன்கள் அடித்து குவித்ததுடன், டெஸ்ட் வரலாற்றிலேயே ஓராண்டில் அதிக சிக்சர் விளாசிய சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.

மேத்யூஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து வந்துள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதன்படி நியூசிலாந்து-இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கியது. புத்தாண்டுக்கு முந்தைய நாளிலும் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டி என்பதால் இதை பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்றும் அழைக்கலாம். ஆனால் நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லமோ பாக்சிங் என்பதை குத்துச்சண்டை என்று புரிந்துகொண்டார் போலும். விளாசி தள்ளிவிட்டார்.

குறைந்த பந்தில் நிறைய ரன்

குறைந்த பந்தில் நிறைய ரன்

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடு களத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, எந்த பந்து வீச்சுக்கும் அசைந்து கொடுக்காமல் விளாசி தள்ளியது. குறிப்பாக அணி கேப்டன் பிரண்டன் மெக்கல்லம், 134 பந்துகளில் 195 ரன்களை குவித்து அவுட் ஆனார். குறைந்த பந்தில் இரட்டை சதம் அடித்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெக்கல்லம் அவுட் ஆனார்.

ஓராண்டில் பறந்த சிக்சர் 30

ஓராண்டில் பறந்த சிக்சர் 30

இருப்பினும் 2014 ஆண்டு மெக்கல்லத்திற்கு சிறப்பான ஒன்றாக மாறியுள்ளது. இன்றைய போட்டியில் 11 சிக்சர்களை விளாசியதையும் சேர்த்தால், இவ்வாண்டில் மெக்கல்லம் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 30 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். டெஸ்ட் வரலாற்றில் இது புது சாதனையாகும். ஆனால், ஒரே டெஸ்ட் போட்டியில் 12 சிக்சர்கள் அடித்த வாசிம் அக்ரமின் சாதனைக்கு வெகு அருகில் வந்து கோட்டை விட்டுள்ளார் மெக்கல்லம்.

அடுத்தடுத்து சதங்கள்

அடுத்தடுத்து சதங்கள்

சார்ஜாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 202 ரன்கள் விளாசிவிட்டு தாயகம் திரும்பிய மெக்கல்லம், இப்போது 195 ரன்களை குவித்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்துள்ளார் மெக்கல்லம்.

கில்கிறிஸ்ட் சாதனை பறிபோக வாய்ப்பு

கில்கிறிஸ்ட் சாதனை பறிபோக வாய்ப்பு

மேலும், நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் ஓராண்டில் 1000 டெஸ்ட் ரன்களை கடப்பதும் இதுதான் முதன்முறையாகும். அந்த சாதனையும் மெக்கல்லம் பெற்றுள்ளார். மேலும், இதுவரை மெக்கல்லம் டெஸ்ட் போட்டிகளில் 92 சிக்சர்களை விளாசி, 100 சிக்சர்கள் அடித்து இந்த சாதனை பட்டியலில் முதலிடத்திலுள்ள ஆஸி. முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் சாதனையை நெருங்கியுள்ளார்.

இலங்கைக்கு நெருக்கடி

இலங்கைக்கு நெருக்கடி

மெக்கல்லத்தின் அதிரடி காரணமாக, ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து 429 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்துள்ளது. இலங்கை அணி விழிபிதுங்கிய நிலையிலுள்ளது.

Story first published: Friday, December 26, 2014, 14:24 [IST]
Other articles published on Dec 26, 2014
English summary
If there is one player to dial for runs and big scores at the moment it is Brendon McCullum. The New Zealand skipper continued his prime form this year as he showed powerful brutality against visiting Sri Lanka on Day 1 of the first Test match in Christchurch on Friday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X