For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கை மலையில் பஸ் திடீர் ரிப்பேர்..! பீதியில் நியூசி. வீரர்கள்..! திக், திக் நிமிடங்கள்..!

கொழும்பு: இலங்கையில், மலைப்பாதையில் பிரேக் டவுன் ஆன பேருந்து நின்றதால் அதில் பயணித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் திகிலில் உறைந்து போயினர்.

நியூசிலாந்து அணி தற்போது இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந் நாட்டிற்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிந்தது.

இதனை அடுத்து 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடர் பாக்கி இருக்கிறது. இந்நிலையில் கண்டிக்கு பேருந்து மூலம் நியூசிலாந்து வீரர்கள் தங்களது ஹோட்டலை நோக்கி சென்றனர்.

ஆத்தாடி.. புஜாரா காலி.. வந்தவுடன் டெரர் காட்டிய மலை மனிதன்.. 100 ஆண்டு சாதனையை உடைத்தார்!ஆத்தாடி.. புஜாரா காலி.. வந்தவுடன் டெரர் காட்டிய மலை மனிதன்.. 100 ஆண்டு சாதனையை உடைத்தார்!

பஸ் பிரேக் டவுன்

பஸ் பிரேக் டவுன்

அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற பேருந்து மலைப்பாதையில் பிரேக் டவுன் ஆனது. இதனால் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் சிறிது நேரம் தவித்து விட்டனர்.

வீரர்கள் மீட்பு

வீரர்கள் மீட்பு

அதன் பிறகு விஷயம் இலங்கை அணி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களை அனுப்பி அங்கிருந்து வீரர்களை மீட்டனர்.

வீடியோ வெளியீடு

பின்னர் அவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டல் அறைக்கு அழைத்து வரப் பட்டனர். இந்த விஷயத்தை நியூசிலாந்து அணியின் மேனேஜர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் வீரர்கள் மனோநிலை எப்படி இருந்தது என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போ வைரல்.

ஏற்கனவே நடந்தது

ஏற்கனவே நடந்தது

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மிகப்பெரிய மசூதி ஒன்றில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த வங்கதேச வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அதுமுதலே நியூசிலாந்து வீரர்கள் ஒருவித அச்சத்தில் இருந்து வருகின்றனர். இலங்கை பயணத்தில் நடுவழியில் பேருந்து ரிப்பேரானதால் ஒரு கணம் ஆடிப் போயினர்.

Story first published: Saturday, August 31, 2019, 14:28 [IST]
Other articles published on Aug 31, 2019
English summary
Newzealand cricket players bus got repaired in hill area, srilanka.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X