For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் உயிர் வாழ்வதே அதிசயம்.. மீண்டும் நடப்பேனானு தெரியாது! - மரண படுக்கையில் கிரிக்கெட் வீரர்

கேப்டவுன்: 1980,90களில் பிறந்த நபர்களுக்கு இவரை தெரியாமல் இருக்காது.. உயரமான தேகம், ஆக்ரோஷமான பந்துவீச்சு, பேட்டிங்கில் அதிரடி என நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்தவர் தான் கிறிஸ் கெய்ர்ன்ஸ். நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட், 215 ஒரு நாள் மற்றும் 2 டி-20 போட்டிகளில் விளையாடினார்.

அந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகைஅந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகை

திருப்பி போட்ட வாழ்க்கை:

திருப்பி போட்ட வாழ்க்கை:

2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் கிறிஸ் கெய்ர்ன்ஸ். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கிறிஸ் கெய்ர்ன்ஸ்க்கு முடக்குவாதம் ஏற்பட்டது. இடுப்புக்கு கீழ் எந்த உறுப்புகளும் இயங்கவில்லை.அதுமட்டுமின்றி இதயத்திற்கு செல்லும் நரம்பில் கோளாறு. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்ட கெய்ர்ன்ஸ்க்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உடலில் அசைவின்றி ஒரு வாரம் இருந்தார்.

மருத்துவமனை

மருத்துவமனை

அதன் பின்னர் தான் கிறிஸ் கெய்ர்ன்ஸ்க்கு நினைவு திரும்பியது. ஆனால் அவரால் உடலில் சிறு அசைவை கூட மேற்கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் மைதானம், ஹோட்டல், ஏர்போர்ட் என சுற்றி திரிந்த கால்கள் மருத்துவமனையில் ஒரே படுக்கையில் மூன்று மாதத்திற்கு அசைவின்றி கிடந்தது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

3 மாத மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார் கிறிஸ் கெய்ர்ன்ஸ். புயல் வேகத்தில் ஓடிய கால்கள் தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ளது. இருப்பினும் தனது விடாமுயற்சி மூலம் சக்கர நாற்காலியில் அமர்ந்தே உடற்பயிற்சி மேற்கொள்கிறார் கெய்ர்ன்ஸ்.

பிழைத்ததே அதிசயம்

பிழைத்ததே அதிசயம்

51 வயதான கிறிஸ் கெய்ர்ன்ஸ், தாம் பிழைத்ததே அதிசயம் என்றும், இனி என் வாழ்நாளில் மீண்டும் நடப்பேனா என்று தெரியாது என்று கிறிஸ் கெய்ர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்தின் கிரிக்கெட்டில் தற்போது ஆரோக்கியமான சூழல் உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

Story first published: Monday, November 15, 2021, 20:16 [IST]
Other articles published on Nov 15, 2021
English summary
Newzealand Ex cricketer Chris cairns shared his experience to the fans, currently He is on wheel chair.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X