For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யப்பா சாமி.. ஆள விடுங்க..! தோனியை பத்தி தப்பாவே சொல்லமாட்டேன்.. டுவிட்டரை அழித்துவிட்டு ஓடிய வீரர்

மும்பை:ஐபிஎல் பைனலில் தோனி ரன் அவுட் ஆனது குறித்த டுவீட் செய்த நியூசி. வீரர் நீஷம், ரசிகர்களின் நெருக்கடிக்கு ஆளாகி, தற்போது அந்த பதிவையே டெலீட் செய்திருக்கிறார்.

அண்மையில் தான் ஐபிஎல் சீசன் முடிந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கடந்தும், ரசிகர்களை கட்டிப்போட்ட அந்த தொடர் முடிந்தாலும் ரசிகர்களின் பேச்சுகள் மட்டும் இன்றும் நின்றபாடில்லை.

அதிலும் ஐபிஎல் பைனலின் தாக்கம் இதுவரை தீரவில்லை. குறிப்பாக தோனி ரன் அவுட் செய்யப்பட்ட விதம்... அடுத்த ஐபிஎல் வரை பேசப்படும் பொருளாக இருக்கும் போல. சின்ன பையன்கள் முதல் கொண்டு ஆளாளுக்கு அம்பயரை அந்த விஷயத்தில் வறுத்து தள்ளிவிட்டனர்.

டென்னிஸ் பிராக்டீஸ்-ல சேரை தூக்கி நடுவுல வீசவா கத்துத் தர்றாங்க? அடாவடி ஆட்டம் போட்ட ஆஸி. வீரர்!! டென்னிஸ் பிராக்டீஸ்-ல சேரை தூக்கி நடுவுல வீசவா கத்துத் தர்றாங்க? அடாவடி ஆட்டம் போட்ட ஆஸி. வீரர்!!

தோனி ரன் அவுட் சர்ச்சை

தோனி ரன் அவுட் சர்ச்சை

அந்த அம்பயருக்கு இணையாக தற்போது லேட்டஸ்டாக இணையத்தில் வறுத்தெடுக்கப்படுவர் நியூசிலாந்து வீரர் நீஷம். அவர் செய்த ஒரு காரியமே அவருக்கு வினையாக வந்து முடிந்திருக்கிறது ரசிகர்களின் வழியாக. தோனியின் ரன் அவுட் குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

டுவிட்டரில் பதிவு

டுவிட்டரில் பதிவு

அதில், தோனி ரன் அவுட் ஆகும் அந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்தும் அவர் அவுட் இல்லை என்று கூறுவது தனக்கு திகைப்பாக இருப்பதாகவும் கூறியிருந்தார். அவ்வளவு தான்.. விடுவார்களாக தமது தல ரசிகர்கள்... டுவிட்டரையே அதகளம் பண்ணிவிட்டனர்.

பதிவு நீக்கம்

பதிவு நீக்கம்

எதிர் கருத்துக்கள், காட்டமான ரி டுவீட்டுகள் என நீஷத்தின் பதிவுக்கு பதிலடிகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தன. ஒரு கட்டத்தில் பொறுத்து, பொறுத்து பார்த்த அவர் அந்த பதிவுகளை நீக்கிவிட்டார். எதற்கு நீக்கினேன் என்று அவர் வெளியிட்ட பதிவு தான் ஹைலைட்.

தினமும் 200 கமெண்ட்டஸ்

அந்த பதிவில் நீஷம் கூறியிருப்பதாவது: தோனியின் அவுட் பற்றிய அந்த பதிவை டெலிட் செய்துவிட்டேன். டெலிட் செய்ததற்கு தனது முடிவை மாற்றிக் கொண்டது காரணம் அல்ல. தினமும் தனது பக்கத்தில் 200 கமெண்ட்ஸ் வந்து குவிந்து கிடக்கிறது.

வேண்டாம் என வேண்டுகோள்

வேண்டாம் என வேண்டுகோள்

அதை பார்க்க, பார்க்க வெறுப்பாக இருக்கிறது. இது போன்ற கருத்துகளை நான் பொதுவாக பொருட்படுத்துவதில்லை. ஆனாலும் இதுபோன்று யாரும் டுவீட் செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நீஷம் கூறியுள்ளார்.

Story first published: Friday, May 17, 2019, 12:30 [IST]
Other articles published on May 17, 2019
English summary
Newzealand player jimmy neesham deleted his tweet about dhoni runout in ipl.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X