For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

200 போட்டிகளில் சச்சின் சாதனை பண்ணாரு… ஆனா.. வெறும் 66 மேட்சுகளில் அதை காலி பண்ணிய வீரர்..!!

காலே: 200 போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை வெறும் 66 போட்டிகளில் சமன் செய்திருக்கிறார் நியூசிலாந்து வீரர் டிம் சவுதி.

இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி தற்போது காலேவில் நடந்து வருகிறது.

அந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் முடிவில் 249 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்தின் டிம் சவுதி டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஒரு சிறப்பான சாதனையை படைத்தார். அதாவது, தனஞ்செய டி சில்வா வீசிய பந்தில், அவர் மெகா சிக்சர் ஒன்றை விளாசி தள்ளினார்.

சிக்சர்கள்

சிக்சர்கள்

அதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 69 சிக்சர்களை விளாசிய பெருமையை பெற்றார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 69 சிக்சர்களை விளாசினார். ஆனால் டிம் சவுதியோ வெறும் 66 போட்டிகளில் விளையாடி 69 சிக்சர்கள் விளாசி சச்சின் சாதனையை சமன் செய்தார்.

சிக்சர்கள் பட்டியல்

சிக்சர்கள் பட்டியல்

சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்கல்லம் 107 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆடம் கில்கிரிஸ்ட் 100 சிக்சர்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். சிக்சர் ராட்சஷன் கிறிஸ் கெயில் 98 சிக்சர்களுடன் 3வது இடத்தை பிடித்திருக்கிறார்.

ரசிகர்களின் கருத்து

ரசிகர்களின் கருத்து

ஜாக் காலிஸ் 97 சிக்சர்களுடன் 4வது இடத்திலும், அதிரடி மன்னன் சேவாக் 91 சிக்சர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். டிம் சவுதியின் இந்த சாதனையை சச்சின் தரப்பு ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அதற்கான காரணங்களையும் அவர் பட்டியலிடுகின்றனர்.

ஆபரேஷன்

ஆபரேஷன்

ரசிகர்கள் கூறியிருப்பதாவது: சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய சிக்சர்களை அடித்து கொண்டுதான் இருந்தார். ஆனால் ஒருமுறை முழங்கையில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த சமயத்தில் அவர் சில ஷாட்களை தவிர்க்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

அதிக எடை பேட்

அதிக எடை பேட்

உதாரணமாக ஹூக், புல்ஷாட்களை மிகவும் தவிர்க்க முடியாத கட்டத்திலேயே அவர் அடித்தார். முழங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் ஸ்லாக் ஸ்வீப்பையும் சச்சின் தவிர்த்தார். அதிக எடை கொண்ட ஹெவி பேட் பயன்படுத்தியதும் அவரது மணிக்கட்டு, முழங்கை, முதுகு என்று அழுத்தத்தை அதிகரித்தது.

ஒப்பீடு வேண்டாம்

ஒப்பீடு வேண்டாம்

ஆகவே இந்த சிக்சர் ஒப்பீடு செய்யக் கூடாது ஒன்று. ஆனாலும் ஒரு எண்ணிக்கை அளவு, சமன், புள்ளிவிவரங்கள் ஆகிய கணக்கின் அடிப்படையில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம் என்று ரசிகர்கள் கூறியிருக்கின்றனர்.

Story first published: Saturday, August 17, 2019, 8:48 [IST]
Other articles published on Aug 17, 2019
English summary
Newzealand player tim southee equals sachin tendulkars rare record against srilanka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X