இப்போதானே முடிஞ்சது... திரும்பவுமா? நியூசிலாந்தை பழிவாங்க ஏற்பாடு.. பிசிசிஐ போட்டுள்ள திட்டம்!

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்துள்ள நிலையில் சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியசத்தில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

பொதுவெளியில் கோலி கூறிய ஒற்றை புகார்.. ஆடிப்போய் அதிரடி நடவடிக்கை எடுக்கும் பிசிசிஐ.. கேப்டனின் பவர்பொதுவெளியில் கோலி கூறிய ஒற்றை புகார்.. ஆடிப்போய் அதிரடி நடவடிக்கை எடுக்கும் பிசிசிஐ.. கேப்டனின் பவர்

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்காக பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தோல்விகள்

தோல்விகள்

நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை பெறுவதால் இந்திய ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதுவும் முக்கிய தொடர்களில் தோல்வி பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து. அதே போல தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.

சூப்பர் திட்டம்

சூப்பர் திட்டம்

இந்நிலையில் நியூசிலாந்து அணியை பழிவாங்க பிசிசிஐ சூப்பர் திட்டம் ஒன்றை போட்டு வருகிறது. அதாவது, நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளிலும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் வரும் நவம்பர் மாதத்தில் ஏற்பாடு செய்யப்படும் எனக்கூறப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் அக்டோபர் மாதத்தின் 3வது வாரம் முதல் அக்டோபர் மாதம் 3வது வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டி20 உலகக்கோப்பைக்கு பிறகு நியூசிலாந்தின் சுற்றுப்பயணமிருக்கும் என கூறப்படுகிறது.

பிசியாகும் இந்திய அணி

பிசியாகும் இந்திய அணி

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டமர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முடித்தவுடன் செப்டம்பர் 3வது வாரம் முதல் அக்டோபர் வரை ஐபிஎல் தொடர் மற்றும் அக்டோபரில் டி20 உலகக்கோப்பை என பிசியாக வலம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Report says Newzealand Team Planning to come India for Test and ODI series,
Story first published: Friday, June 25, 2021, 11:37 [IST]
Other articles published on Jun 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X