தம்பி.. அதான் நீங்க பண்றது தெளிவா தெரியுதே.. மாட்டிக் கொண்ட இளம் வீரர்.. சாட்டையை சுழற்றிய ஐசிசி!

Pooran Ball tampering vs Afghanistan | பந்து சேத விவகாரத்தில் மாட்டிக் கொண்டார் நிக்கோலஸ் பூரன்

லக்னோ : வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தண்டனை பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஒருநாள் தொடர் இந்தியாவின் லக்னோ நகரில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த திங்கள் அன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது நகத்தை வைத்து பந்தை சேதப்படுத்தி மாட்டிக் கொண்டார் பூரன்.

ஸ்மித் - வார்னர் விவகாரம்

ஸ்மித் - வார்னர் விவகாரம்

பந்து சேத விவகாரத்தில் கடந்த ஆண்டு சிக்கிய வார்னர் - ஸ்மித், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பால் ஓராண்டு தடை விதிக்கப்பட்டு, கடும் தண்டனை பெற்றனர். அது கிரிக்கெட் உலகையே ஆட்டிப் படைத்தது.

சிக்கும் வீரர்கள்

சிக்கும் வீரர்கள்

அந்த விவகாரத்திற்குப் பின்னும் கிரிக்கெட் வீரர்கள் பந்து சேதம் செய்து சிக்கி வருகின்றனர். அப்படி தான் சிக்கி இருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த தலைமுறை அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன்.

ஆப்கன் - வெ.இண்டீஸ் போட்டி

ஆப்கன் - வெ.இண்டீஸ் போட்டி

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை 3 - 0 என கைப்பற்றி அசத்தியது வெஸ்ட் இண்டீஸ்.

ஆட்டநாயகன் விருது

ஆட்டநாயகன் விருது

இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் நிக்கோலஸ் பூரன் 50 பந்தில் 67 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

நிக்கோலஸ் பூரன் சிக்கினார்

நிக்கோலஸ் பூரன் சிக்கினார்

எல்லாம் சரியாக சென்ற போது தான் ம,மூன்றாவது போட்டியில் தானாகவே சிக்கினார் பூரன். அந்தப் போட்டியில் தன் கை கட்டைவிரல் நகத்தை வைத்து பந்தை சேதப்படுத்தி இருக்கிறார் பூரன்.

வீடியோ ஆதாரம்

வீடியோ ஆதாரம்

இது போட்டி ஒளிபரப்பில் தெளிவாக சிக்கி இருக்கிறது. வீடியோ ஆதாரம் கிடைத்ததை அடுத்து தன் குற்றத்தை மறுக்க முடியாத நிலைக்கு சென்றார் நிக்கோலஸ் பூரன். தான் முடிவு செய்வதில் ஏற்பட்ட பெரிய தவறு தான் இந்த செயலுக்கு காரணம் என விளக்கம் அளித்து தன் தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

அம்பயர்கள் குற்றச்சாட்டு

அம்பயர்கள் குற்றச்சாட்டு

போட்டி அம்பயர்கள் நால்வரும் நிக்கோலஸ் பூரன் பந்தை சேதப்படுத்திய வீடியோ ஆதாரத்தை வைத்து அவர் மீது அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டு வைத்தனர். மேட்ச் ரெப்ரீ விசாரணை செய்து தவறை உறுதிப்படுத்தினார்.

ஐசிசி தண்டனை

ஐசிசி தண்டனை

ஐசிசி விதிப்படி பூரனுக்கு ஐந்து தடைப் புள்ளிகள் வழங்கப்பட்டது. அத்துடன் அடுத்து நடக்க இருக்கும் நான்கு டி20 போட்டிகளில் நிக்கோலஸ் பூரன் ஆட தடை விதித்தது ஐசிசி.

இந்திய தொடர் பாதிப்பு

இந்திய தொடர் பாதிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இந்திய அணிக்கு எதிராக டிசம்பரில் நடக்க உள்ள டி20 தொடரின் முதல் போட்டியில் நிக்கோலஸ் பூரன் அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்டார்

மன்னிப்பு கேட்டார்

தன் அணியின் சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார் நிக்கோலஸ் பூரன். தன் தவறில் இருந்து தான் கற்றுக் கொள்வதாக கூறி இருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Nicolas Pooran caught after video shows he was tampering the ball
Story first published: Wednesday, November 13, 2019, 18:56 [IST]
Other articles published on Nov 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X