“இந்திய அணிக்கு அவமானம்!!” ஐசிசி டி-20 அணியை ஆக்கிரமித்த பாக். வீரர்கள்.. விராட் கோலியே புறக்கணிப்பு

மும்பை: ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த டி20 அணியில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பிடிக்காததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

2021ஆம் ஆண்டிற்கான பெஸ்ட் டி20 ப்ளேயிங் 11 அணியை ஐசிசி தேர்வு செய்து அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். 2022 லக்னோ அணி செம பிளான்..!! 3 சூப்பர் வீரர்கள் தேர்வு.. அதிரடி..!!சரவெடி தான்..!!ஐ.பி.எல். 2022 லக்னோ அணி செம பிளான்..!! 3 சூப்பர் வீரர்கள் தேர்வு.. அதிரடி..!!சரவெடி தான்..!!

இந்த அணியில் கேப்டன் முதல் முன்னணி பவுலர்கள் வரை என பாகிஸ்தான் வீரர்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

கடந்த ஆண்டு 14 டி20 போட்டிகளில் விளையாடி 589 ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் மற்றும் 1326 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆகியோர் அணியின் ஓப்பனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

முதல் விக்கெட்டிற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி அணியின் கேப்டனாகவும் இவரே தேர்வாகியுள்ளார். பாபரை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்கரம், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அடுத்தடுத்து இடங்களில் இருக்கின்றனர். பினிஷர் பணிக்காக தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

சுழற்பந்துவீச்சில் தென்னாப்பிரிக்காவின் ஷாம்ஸி மற்றும் இலங்கையின் வாண்டு ஹசரங்காவின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசில்வுட், வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான், பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரீடி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இனி இதை சரி செய்வோம்.. Indian Team தோல்வி குறித்து KL Rahul பேச்சு
 ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

ஐசிசியின் இந்த ப்ளேயிங் 11ல் பாகிஸ்தானை சேர்ந்த 3 வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில் இந்திய வீரர்கள் ஒருவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக விராட் கோலியின் பெயர் கூட இடம்பெறவில்லை. இதனால் இந்திய அணிக்கே இது அவமானம் என ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC Men's T20 Team of the Year is revealed, fans got angry after No Indian is get placed
Story first published: Thursday, January 20, 2022, 12:43 [IST]
Other articles published on Jan 20, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X