For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்.. மீண்டும் மருத்துவமனையில் அனுமதியா? உண்மை என்ன - முழு பின்னணி

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பொய்யான தகவல் பரவி வருகிறது.

ஐபிஎல் 2020 தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் உலகமே தற்போது ஐபிஎல் தொடரில் மிகவும் பிசியாக உள்ளது. இந்த நிலையில் மூத்த வீரர் கபில் தேவ் குறித்து பொய்யான வதந்தி இணையத்தில் பரவி வருகிறது.

No Kapil Dev is not admitted in hospital again

முன்னாள் கேப்டன் கபில் தேவிற்கு கடந்த சில நாடுகளுக்கு முன் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு உடனே ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இந்த சிகிச்சை காரணமாக பூரண குணம் அடைந்த கபில் 2 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆனார்.

இந்த நிலையில் தற்போது கபில் தேவ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பொய்யான தகவல் பார்வை வருகிறது. இவரின் உடல்நிலை மோசமாகிவிட்டது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்றது பொய்யான தகவல்கள் பரபரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கபில் தேவ் உடல்நிலை குறித்து வெளியாகும் செய்திகளை அவரின் நெருங்கிய நண்பர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் மறுத்துள்ளார். அதேபோல் தற்போது ஐபிஎல் தொடரில் வர்ணனை பணிகளையே செய்து வரும் கவாஸ்கர் போன்ற வீரர்களும் இது தொடர்பாக வெளியாகும் வதந்திகளை மறுத்துள்ளனர்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள கபில் தேவ் முழு உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FACT CHECK

1. Claim: கபில் தேவ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பொய்யான தகவல் பார்வை வருகிறது.
2. Conclusion: கபில் தேவ் முழு உடல் நலத்துடன் இருக்கிறார்.
3. Rating: 1 = "False "
4.Fake News Author: சமூக வலைதளம்

Story first published: Tuesday, November 3, 2020, 16:25 [IST]
Other articles published on Nov 3, 2020
English summary
Fact Check : No Kapil Dev is not admitted in the hospital again.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X