சம்பளம் வேண்டாம்..! விளையாட மட்டும் விடுங்க… ப்ளீஸ்..!! ஐசிசியிடம் கதறும் மூத்த வீரர்

Zimbabwe Player : சம்பளம் வேண்டாம்..! தயவு செய்து எங்களை விளையாட விடுங்கள்- வீடியோ

ஹராரே: சம்பளம் கொடுக்காட்டியும் பரவால்ல... எங்களை விளையாட விடுங்க என்று ஐசிசியிடம் ஜிம்பாப்வே அணி மூத்த வீரர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு காரணமாக, உடனடி நடவடிக்கையை ஐசிசி எடுத்தது. அதன் அடிப்படையில் ஐசிசி உறுப்பினர்களில் இருந்து ஜிம்பாப்வே நீக்கப்பட்டது.

ஐசிசி விதிகளை மீறியதால், ஜிம்பாப்வே அணிக்கு எந்த ஒரு நன்கொடையும் இனி வழங்கப் படமாட்டாது. அதேபோல, ஐசிசி உடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டன.

பங்கேற்க தடை

பங்கேற்க தடை

ஐசிசி நடத்தும் தொடர்களில் ஜிம்பாப்வே பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் தொடர்களில் ஜிம்பாப்வே அணி தாராளமாக பங்கேற்கலாம் என்பதையும் ஐசிசி தெரிவித்திருந்தது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்

அதன் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்கிறது. அதேபோல் அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே செல்கிறது. அந்த தொடர்கள் முடிந்தவுடன் 2020 ஜனவரியில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட ஜிம்பாப்வே இந்தியா வருகிறது.

நன்கொடை நிறுத்தம்

நன்கொடை நிறுத்தம்

ஐசிசியிடம் நன்கொடை பெற்ற காலத்திலேயே வீரர்களுக்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் 2 மாத ஊதியத்தை நிலுவையில் வைத்திருந்தது. இந் நிலையில் தற்போது ஐசிசியின் அனைத்து நன்கொடையும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இனி சம்பளம் இல்லாமல் தான் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அணியின் மூத்த வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊதியம் இல்லை

ஊதியம் இல்லை

அவர் கூறுகையில் அண்மையில், அயர்லாந்து, நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடினோம். அதற்கு இப்போது வரை எங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை.

மறுபரிசீலனை

மறுபரிசீலனை

இனியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்று வேதனை பொங்க தெரிவித்தார். சம்பளம் கூட வேண்டாம், எங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று வருத்தத்துடன் கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
No need salary, allow us to play Zimbabwe senior player requests ICC.
Story first published: Wednesday, July 31, 2019, 11:18 [IST]
Other articles published on Jul 31, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X