For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி..!! நீங்க ஆபரஷேனெல்லாம் பண்ண முடியாது..!! ஏன்... எதற்காக இந்த கட்டுப்பாடு..!

Recommended Video

Dhoni in Army : தோனி பயிற்சி எடுக்கலாம்... ஆனால் அதுக்கு அனுமதியில்லை...வீடியோ

டெல்லி: ராணுவ பயிற்சி பெற தோனிக்கு அனுமதி அளித்துள்ள இந்திய ராணுவம் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

இந்திய ராணுவத்தின் மீதும், வீரர்களின் மீதும் எக்கச்சக்க அன்பும், மரியாதையும் வைத்திருப்பவர் தோனி. அதனை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு நாள் போட்டியின் போது ராணுவத்தை மரியாதை செய்யும் வகையில் பலிதான் ராணுவ முத்திரையை அவர் அணிந்திருந்தார்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்று அங்கிருக்கும் வீரர்களை உற்சாகப்படுத்துதையும் அவர் தவறாது செய்து வருகிறார். இந்நிலையில் ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் தோனி, ராணுவ குழுவுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தார்.

ராணுவம் பரிசீலனை

ராணுவம் பரிசீலனை

அதன் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தம்மை சேர்க்க வேண்டாம் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து, தோனியின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோனிக்கு அனுமதி

தோனிக்கு அனுமதி

அதன்படி ராணுவ பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற, ராணுவ தளபதி பிபின் ராவத், தோனிக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், பயிற்சியின் போது சில முக்கிய கட்டுப்பாடுகளையும் அவர் விதித்திருக்கிறார்.

பாதுகாப்பு நடவடிக்கை

பாதுகாப்பு நடவடிக்கை

அவற்றில் மிக முக்கியமானது ஒன்று இருக்கிறது. அதாவது தோனிக்கு எந்தவித ராணுவ நடவடிக்கையில் பங்குபெற அனுமதி வழங்கப்படவில்லை. தோனியின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கவுரவ லெப்டினன்ட் கேனல்

கவுரவ லெப்டினன்ட் கேனல்

அதாவது, ராணுவ பயிற்சியில் தோனி கலந்துகொள்ள முடியுமே தவிர, ராணுவ சிறப்பு ஆபரேஷன்களில் அவர் பங்கேற்க முடியாது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தோனி பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். தோனிக்கு 2011ம் ஆண்டு ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கேனல் பதவி வழங்கப்பட்டது.

Story first published: Monday, July 22, 2019, 11:56 [IST]
Other articles published on Jul 22, 2019
English summary
No permission for dhoni in military operations, says army chief general bipin rawath.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X