For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் அவரா கூடவே கூடாது.. சாஸ்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முக்கிய புள்ளிகள்.. புதிய பிளவு

இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் சாஸ்திரி நியமிக்கப்பட கூடாது என்று பலர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.

Recommended Video

Ravi Sastri : ரவி சாஸ்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முக்கிய புள்ளிகள்- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் சாஸ்திரி நியமிக்கப்பட கூடாது என்று பலர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.

இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் ஒருவாரத்தில் அந்த நீட்டிப்பு அவகாசமும் முடிய உள்ளது. இதனால் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டும்.

விண்ணப்பம்

விண்ணப்பம்

இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ இணையத்தில் வெளியிட்டு உள்ளது. தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் மற்ற நிர்வாகிகள் ஆகியோரை தேர்வு செய்ய வெளிப்படையாக விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

மீண்டும் விண்ணப்பம்

மீண்டும் விண்ணப்பம்

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் சாஸ்திரி விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மீண்டும் இரண்டு வருடங்களுக்கு அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் விரைவில் விண்ணப்பிக்க உள்ளார் என்று செய்திகள் வருகிறது.

இதற்கு எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு

இதற்குத்தான் தற்போது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க கூடாது. அவருக்கு அதற்கான தகுதி கிடையாது. இந்திய அணிக்கு வேறு ஒரு நல்ல பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். முக்கியமாக மும்பையை சேர்ந்த முக்கிய புள்ளிகள் சாஸ்திரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அணிக்குள்

அணிக்குள்

அதேபோல் இந்திய அணிக்குள்ளும் சாஸ்திரிக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது. கோலி ஆதரவு வீரர்கள் மட்டுமே சாஸ்திரிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ரோஹித் சர்மா ஆதரவு வீரர்கள் யாரும் சாஸ்திரிக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் சாஸ்திரி பயிற்சியாளராக தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் விண்ணப்பித்தால் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவாரா என்பது சந்தேகம்தான்.

Story first published: Wednesday, July 17, 2019, 10:35 [IST]
Other articles published on Jul 17, 2019
English summary
No Sastri, Not you again: Players raise questions against coach selection for team India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X