ஊக்க மருந்து பயன்படுத்திய சக வீரர்.. ஒலிம்பிக் தங்க பதக்கத்தை இழந்தார் உசேன் போல்ட்

டெல்லி: பெய்ஜிங் ஒலிம்பிக்கின் 400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜமைக்கா அணியை தகுதி நீக்கம் செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இதனால் அந்த அணியில் இடம்பெற்றிருந்த உலகின் மின்னல் வீரர் உசைன் போல்ட் தனது தங்கப் பதக்கத்தை இழந்தார்

கடந்த 2008ம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் உசேன் போல்ட். அந்த போட்டியில் அவருடன் பங்கேற்ற சக நாட்டு வீரர் நெஸ்டா கார்ட்டர் மெத்தில் ஹெக்சாமைன் என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கார்ட்டரிடன் கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தான் உண்ணும் உணவிலோ, பானத்திலோ எப்படி அது கலந்து என் உடலில் சென்றது என எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து கார்ட்டர் உசேன் போல்ட் உட்பட 4 பேரின் தங்கம் திரும்ப பெறப்பட உள்ளது.

இந்தநிலையில் ரியோ டி ஜெனிரோ வில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெற்ற தங்கம் உட்பட இதுவரை 9 தங்கங்களை உசேன் போல்ட் பெற்றார். அதன் மூலம் ‛ஹாட்ரிக்கில் ஹாட்ரிக்' படைத்த நாயகன் என புகழ்ந்து பேசப்பட்டார் உசேன் போல்ட்.

தற்போது அதில், ஒரு பதக்கத்தை திருப்பி அளிக்கும் பட்சத்தில் அந்த பெருமையை இழக்கிறார் உசேன் போல்ட். இதனால் டிரினிடாட் அண்ட் டொபாகோவுக்கு தங்கமும், ஜப்பானுக்கு வெள்ளியும், பிரேசிலுக்கு வெண்கலமும் கிடைக்கவுள்ளது.

சர்வதேச தடகள சம்மேளனத்தின் சிறந்த வீரருக்கான விருதை 2008, 2009, 2011, 2012, 2013, 2016ம் ஆண்டுகளில் உசேன் போல்ட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Jamaican sprint legend Usain Bolt will have to return one of his 9 Olympic gold medals due to a doping offence by his team-mate at the 2008 Beijing Games.
Story first published: Wednesday, January 25, 2017, 23:57 [IST]
Other articles published on Jan 25, 2017
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X