For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை அணிந்தவர் யார்..? மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர்.! வெளியான புதிய தகவல்

ஆன்டிகுவா: முன்னாள் கேப்டன் தல தோனியின் ஜெர்சி எண் 7யை யார் பயன் படுத்துகிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஐசிசி பல மாற்றங்களை செய்து வருகிறது. அதில் ஒன்று தான் டெஸ்ட் போட்டிக்கான ஜெர்சிசை மாற்றுவது என்பது.

பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வெள்ளை நிற ஆடை தான் அணியப் படும். அதில் எண்கள் இருக்காது. பாரம்பரியமாக இந்த நடைமுறை தான் பின்பற்றப் படுகிறது.

நம்பர் இருக்காது

நம்பர் இருக்காது

டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் வெள்ளை உடை அணிவது வழக்கம். அதில் அவர்களது பெயரோ எண்ணோ இருக்காது. இந்த நடைமுறையை கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் விரும்பினர்.

புதிய ஜெர்சி

புதிய ஜெர்சி

இந்நிலையில் ஐசிசியின் புதிய மாற்றத்தின் படி வீரர்ககளின் டெஸ்ட் ஜெர்சியில் அவர்களது பெயரும் எண்ணும் இடம்பெற வேண்டும். அந்த வகையில் முதல் முறையாக தற்போது இந்திய அணி புதிய ஜெர்சியை பயன்படுத்த இருக்கிறது.

எண்ணை மாற்றினர்

எண்ணை மாற்றினர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் வீரர்கள் இந்த ஜெர்சியை அணிந்திருந்தனர். ஆனாலும் சிலர் வேறு வீரர்களின் ஜெர்சியை பயன்படுத்தினர். உதாரணத்திற்கு அஸ்வின் பேட்டிங் செய்யும் போது ரோகித் ஷர்மா ஜெர்சியை அணிந்திருந்தார்.

கட்டுப்பாடு இல்லை

கட்டுப்பாடு இல்லை

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களோ, பெயரோ எண்ணோ அல்லாத பழைய டெஸ்ட் ஜெர்சியை தான் அணிந்து விளையாடினர். பயிற்சி போட்டிகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்பதால் யாரும் பெரிதாக கொள்ளவில்லை.

யாருக்கு என்ன நம்பர்?

யாருக்கு என்ன நம்பர்?

இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ டெஸ்ட் ஜெர்சி இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. வீரர்கள் எந்த எண் கொண்ட ஜெர்சியை அணிந்திருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கிறது.

கோலிக்கு 18

கோலிக்கு 18

வீரர்கள் பெரும்பாலும் தங்களது ஒருநாள் மற்றும் டி 20 ஜெர்சி எண்ணையே பயன்படுத்தி உள்ளனர். கேப்டன் விராட் கோலி 18 எண்ணையும், ரோஹித் ஷர்மா 45 எண்ணையும் பயன்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் புஜாரா 25யை பயன்படுத்தியுள்ளார்.

7ம் நம்பர் இல்லை

7ம் நம்பர் இல்லை

மேலும் ரிஷப் பன்ட், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குலதீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முறையே 17, 11, 97, 23, 99, 8 ஆகிய எண்களை பயன்படுத்தி இருக்கின்றனர். தோனியின் ஜெர்சி எண் 7யை யாராவது பயன்படுத்துவர்களா? என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக யாரும் அந்த எண்ணை பயன்படுத்த வில்லை.

போட்டிக்கு எதிர்பார்ப்பு

போட்டிக்கு எதிர்பார்ப்பு

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. அங்குள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பாகம் என்பதால் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Wednesday, August 21, 2019, 17:40 [IST]
Other articles published on Aug 21, 2019
English summary
Nobody didn’t used Dhoni jersey no 7 in test series against west indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X