For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையை இந்தியா ஜெயிக்கலன்னா தான் ஆச்சரியம்..! இவரே சொல்லிட்டாரே…! ஏக குஷியில் ரசிகர்கள்

போர்ட் ஆப் ஸ்பெயின்:வரும் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரெய்ன் லாரா கூறியிருக்கிறார்.

குறைந்த நாட்களே உள்ளன ஐசிசி உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு. பாகிஸ்தானில் அணியில் இறுதிக்கட்ட வீரர்கள் மாற்றம், நாளை இந்திய அணி இங்கிலாந்து பயணம், அதனை தொடர்ந்து பயிற்சி போட்டிகள் என உலக கோப்பை களை கட்ட தொடங்கியிருக்கிறது.

இந்திய அணியை பொறுத்தவரை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பல முன்னாள் இந்நாள் ஜாம்பவான்கள் இதையே தான் பதிவு செய்து வருகின்றனர். அந்த கருத்தை தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரெய்ன் லாரா கூறியிருக்கிறார்.

தோனி, கெயில், மலிங்கா.. இந்த 3 பேரில் யாருக்கு கிடைக்கும் உலக கோப்பை ஆட்ட நாயகன் விருது? ஓர் அலசல் தோனி, கெயில், மலிங்கா.. இந்த 3 பேரில் யாருக்கு கிடைக்கும் உலக கோப்பை ஆட்ட நாயகன் விருது? ஓர் அலசல்

யாருக்கு உலக கோப்பை?

யாருக்கு உலக கோப்பை?

ஆனால் அதை கொஞ்சம் வேற பதத்தில் மாற்றி கூறியிருக்கிறார். அதாவது மற்றவர்கள் எல்லாரும் நிச்சயம் உலக கோப்பை இந்தியாவுக்குதான், இறுதி போட்டி வரை இந்தியா முன்னேறும்... அதன் பிறகு உத்வேகத்துடன் முயற்சி செய்தால் கோப்பை இந்தியாவுக்கு தான் என்று கூறி வருகின்றனர்.

லாரா சொன்னது என்ன?

லாரா சொன்னது என்ன?

லாரா கூறுவதை பாருங்கள்... இதை கேட்டால் ஒவ்வொரு இந்திய அணி ரசிகரும் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம். அவர் கூறியிருப்பதாவது:இந்திய அணியை பொறுத்தவரை, தனது சிறப்பான ஆட்டத்தையும் முன்னதாக தந்திருக்கின்றனர்.

வலுவாக காட்சியளிக்கிறது

வலுவாக காட்சியளிக்கிறது

விராட் கோலி தலைமையிலான சிறந்த அணியாக இந்திய அணி தற்போது உள்ளது. வேகம், விவேகம் இரண்டும் சேர்ந்த மூத்த வீரர்களும் இளைய வீரர்களும் ஒருசேர பெற்றுள்ள இந்திய அணி இன்னும் வலுவாக காட்சி அளிக்கும்.

ஆச்சரியம் இல்லை

ஆச்சரியம் இல்லை

3வது முறையாக உலக கோப்பையை இந்தியா கைப்பற்றினால், அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார். லாராவின் இந்த புகழாரத்தை ரசிகர்களும், இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக பிரெண்டன் மெக்கல்லம், பென் ஸ்டோக்ஸ் மற்றும் பல புகழ்பெற்ற கிரிக்கெட் பிரபலங்கள் இந்திய வீரர்களான கோலி, தோனி உள்ளிட்டோரை பாராட்டி பேசியுள்ளனர்.

Story first published: Tuesday, May 21, 2019, 18:08 [IST]
Other articles published on May 21, 2019
English summary
Nobody will be surprised if India becomes the 2019 world cup champions says brian lara.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X