For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாய்ப்புகளை தவறவிட்ட நார்த்ஈஸ்ட் யுனைடெட்... பொறுமையை சோதித்த பெங்களூரு.. போட்டி டிரா

கோவா : கோவாவின் திலக் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 56வது போட்டி டிரா ஆனது.

இந்த போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதிய நிலையில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டின.

கோல் அடிக்க தனக்கு கிடைத்த அதிகமான வாய்ப்புகளை பயன்படுத்த நார்த்ஈஸ்ட் அணி தவறிய நிலையில், பெங்களூரு அணி ப்ரேக்கிற்கு பிறகு நான்கே நிமிடத்தில் கோல் போட்டு போட்டியை டிரா செய்தது.

பாண்டியாவின் பிரதர் இவ்வளவு மோசமா? முக்கிய வீரர்களின் எதிர்காலம் காலி.. வெளியாகும் பரபர தகவல்கள்! பாண்டியாவின் பிரதர் இவ்வளவு மோசமா? முக்கிய வீரர்களின் எதிர்காலம் காலி.. வெளியாகும் பரபர தகவல்கள்!

56வது போட்டி

56வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 56வது போட்டி நேற்றைய தினம் கோவாவின் திலக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதிய நிலையில், இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு போட்டியை டிரா செய்தன.

தவறவிட்ட நார்த்ஈஸ்ட்

தவறவிட்ட நார்த்ஈஸ்ட்

கோல் அடிக்க தனக்கு கிடைத்த அதிகமான வாய்ப்புகளை இந்த போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி தவறவிட்டது. ஆயினும் அந்த அணியின் லூயிஸ் மச்சாடோ அடித்த கோல் மூலம் அந்த அணி முன்னிலை வகித்தது. தொடர்ந்து இடைவேளைக்கு பிறகு நான்கே நிமிடத்தில் பெங்களூரு அணி ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. அந்த அணியின் ராகுல் பேக்கே வெளிப்பக்கத்தில் இருந்து ஒரு கோல் அடித்து போட்டியை டிரா செய்தார்.

பலனளிக்காத மாற்றங்கள்

பலனளிக்காத மாற்றங்கள்

இதையடுத்து ஜெரார்ட் நஸ் தலைமையிலான நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி தொடர்ந்து 7 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதேபோல பெங்களூரு அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இரு அணிகளும் தலா 3 மாற்றங்களுடன் இந்த போட்டியை எதிர்கொண்டாலும் எதுவும் பலனளிக்கவில்லை.

அதே இடத்தில் தொடரும் அணிகள்

அதே இடத்தில் தொடரும் அணிகள்

இந்த போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் மேலும் முன்னேறும் தீவிரத்துடன் இரு அணிகளும் இந்த போட்டியை அணுகின. ஆனால் போட்டி டிரா ஆனதையடுத்து புள்ளிகள் பட்டியலில் ஒரு புள்ளிகள் அதிகமாக பெற்றுள்ள போதிலும் அதே 6 மற்றும் 7வது இடத்திலேயே இரு அணிகளும் தொடர்ந்து உள்ளன.

Story first published: Wednesday, January 13, 2021, 13:53 [IST]
Other articles published on Jan 13, 2021
English summary
Gerard Nus' side are now winless in seven games, while Bengaluru four-game losing streak end but with a draw
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X