For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஒரு யார்க்கர் பந்து கூட வீசவில்லை" இந்திய அணியின் தோல்விக்கு இவர்களே காரணம்.. கொதிக்கும் ரசிகர்கள்!

டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் யார்க்கர் பந்துகளை வீசாதது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சிய் தோல்வியை சந்தித்துள்ளது.

வங்கதேச அணி கடைசி விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து த்ரில் வெற்றியை பெற்றது. இதில் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் மற்றும் ரோகித் சர்மா கேப்டன்சி குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

“இந்தியாவால் என்னங்க செய்ய முடியும்??”.. வம்பிற்கு இழுத்த வங்கதேச அணி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்! “இந்தியாவால் என்னங்க செய்ய முடியும்??”.. வம்பிற்கு இழுத்த வங்கதேச அணி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

யார்க்கர் எங்கே?

யார்க்கர் எங்கே?

187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி 136 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது வங்கதேச அணியின் மெஹதி ஹசன் மிராஸ் - முஷ்டஃபிகுர் ரஹ்மான் களத்தில் இருந்தனர். டெய்லண்டர் பேட்ஸ்மேன்களான இருவருக்கும் இந்திய பந்துவீச்சாளர்கள் பிட்ச்சை நம்பியும், ஸ்விங்கை நம்பியுமே பந்துவீசினர்.

தீபக் சஹர் பிரச்சினை

தீபக் சஹர் பிரச்சினை

குறிப்பாக தீபக் சஹர் மற்றும் ஷர்துல் தாகூர் எந்த யார்க்கரையும் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு வீசவில்லை. அதேபோல் 50 ஓவர்களில் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் ஒரு யார்க்கர் பந்துகளை கூட வீசவில்லை. வங்கதேச அணியின் மெஹதி ஹசன் பவுண்டரிகள் விளாசிய போதும், தீபக் சஹர் மீண்டும் யார்க்கரை விளாசல் இருந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன்சி தவறு

கேப்டன்சி தவறு

அதேபோல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கேப்டன்சியும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக மாறியுள்ளது. வாஷிங்டன் சுந்தர் 5 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆனால் அவருக்கு அடுத்து ஓவர்கள் வழங்காமல் ஷபாஸ் அஹ்மத்-ற்கு தொடர்ந்து ஓவர்களை வழங்கியது வங்கதேச அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

கேஎல் ராகுல் கேட்ச்

கேஎல் ராகுல் கேட்ச்

இதுமட்டுமல்லாமல் வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்திருந்த போது மெஸதி ஹசன் கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பராக செயல்பட்ட கேஎல் ராகுல் தவறவிட்டது ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. இதனால் இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங், பவுலிங், கேப்டன்சி, ஃபீல்டிங் என அனைத்திலும் மோசமாக செயல்பட்டதே காரணமாக பார்க்கப்படுகிறது.

 மோசமான தோல்விகள்

மோசமான தோல்விகள்

அதேபோல் நடப்பாண்டில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர், தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர், இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட், ஆசியக் கோப்பை தோல்வி, டி20 உலகக்கோப்பை தோல்வி, வங்கதேச அணிக்கு எதிரான தோல்வி என்று இந்திய அணி ரசிகர்களுக்கு மோசமான நினைவுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இதனால் 2023ம் ஆண்டு உலகக்கோப்பையை வெற்றிபெற முடியுமா என்ற கேள்வியையும் இந்திய ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Story first published: Sunday, December 4, 2022, 20:49 [IST]
Other articles published on Dec 4, 2022
English summary
The Indian bowlers did not bowl yorkers in the first ODI against Bangladesh which has created a stir among the fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X