For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரு விளையாடுறத துட்டு கொடுத்து பாக்குறதுதான் சரி: இந்திய வீரரை புகழ்ந்த ஆம்ப்ரோஸ்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ஜாம்பவான் கர்ட்லி ஆம்புரோஸ் இந்திய வீரர்களுக்கு தீவிர ரசிகராக மாறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் கர்ட்லி. டெஸ்ட் போட்டிகளில் இவர் 405 விக்கெட்களை எடுத்துள்ளார்.

இவர் விளையாடிய காலத்தில் இவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். அப்படிப்பட்ட ஜாம்பவான் சமீபத்தில் இந்திய பவுலர் பும்ராவை புகழ்ந்து தள்ளினார்.

பும்ராவுக்கு புகழாரம்

பும்ராவுக்கு புகழாரம்

டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா கண்டிப்பாக 400 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்துவார். பும்ராவின் பந்துவீச்சு மிக வித்தியாசமான ஒன்றாக இருக்கும். ஓடி வருவது மெதுவாக இருந்தாலும், க்ரிஸுக்கு அருகில் வந்தவுடன் முழு வேகத்தையும் காட்டுவார். அவர் வீசுவது மிக வித்தியாசமாக இருந்தாலும் அவர் வீசும் விதம் மிகவும் கடினமானது.

 விராட் கோலி

விராட் கோலி

ஆம்ரோசை வியக்க வைத்தது ஒரே ஒரு இந்தியர் தானா என ரசிகர்கள் கேட்ட நிலையில் பேட்ஸ்மேன் ஒருவரும் கர்ட்லி ஆம்ரோசை கவர்ந்துள்ளார். அது இந்திய அணியின் விராட் கோலி தான். விராட் கோலியின் கிளாசிக் ஆட்டம் பலரையும் வசப்படுத்தும். குறிப்பாக அதிரடிக்கு செல்லாமல், டைமிங்கில் ஷாட்களை அவர் கையாளும் விதத்திற்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் கர்ட்லி ஆம்ரோஸ் தானும் கோலியின் ரசிகன் தான் என ஒப்புக்கொண்டுள்ளார்.

காரணம்

காரணம்

இதுகுறித்து பேசிய அவர், விராட் கோலி அற்புதமான கிரிக்கெட் வீரர். கிரிக்கெட்டை பொறுத்தவரை சில வீரர்களின் ஆட்டத்தை கண்டிப்பாக பணம் செலுத்தி மட்டுமே பார்க்க வேண்டும் எனக் கூறுவார்கள். அதில் விராட் கோலியும் ஒருவர். அனைத்து வடிவ போட்டிகளிலும் அவர் ஒரு கிளாசிக் வீரராக உள்ளார் எனத்தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான கேப்டன்

வெற்றிகரமான கேப்டன்

ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் ஒரு கேப்டனாகவும் கோலி அசத்தியிருக்கிறார். இவரின் தலைமையில் இதுவரை 60 டெஸ்ட்களில் ஆடியுள்ள இந்திய அணி 36ல் வெற்றி ( 60%) பெற்றுள்ளது. இந்திய அணி கேப்டன்களில் அதிக வெற்றி பெற்றுக்கொடுத்தவர் ஆகும். இவரின் தலைமையில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. அதே போல அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 12, 2021, 21:05 [IST]
Other articles published on May 12, 2021
English summary
Not only bumrah, Ambrose admitted being fan of another India player
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X