For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி மாதிரி வேகம் இல்ல... ஸ்டம்ப் அவுட்டை மிஸ் செய்து அசடு வழிந்த கேப்டன்!

சிட்னி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் ஆரோன் பின்ச்க்கு பதிலாக விக்கெட் கீப்பர் மாத்யூ வேட் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார்.

ஒரு கட்டத்தில் ஷிகர் தவானின் ஸ்டம்ப் அவுட்டை மிஸ் செய்த வேட், தோனி மாதிரி வேகம் விக்கெட் கீப்பிங்கில் தன்னிடம் இல்லை என்று ஷிகரிடம் தெரிவித்தது வைரலானது.

தோனிக்கு அப்புறம் இவர்தான்.. கிரிக்கெட் உலகின் அடுத்த சூப்பர்ஸ்டார்.. புகழின் உச்சியில் இளம் வீரர்!தோனிக்கு அப்புறம் இவர்தான்.. கிரிக்கெட் உலகின் அடுத்த சூப்பர்ஸ்டார்.. புகழின் உச்சியில் இளம் வீரர்!

டி20 தொடரின் 2வது போட்டி

டி20 தொடரின் 2வது போட்டி

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான நேற்றைய இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி 19.4 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியாவின் இலக்கை வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

ஸ்டம்ப் அவுட் மிஸ்

ஸ்டம்ப் அவுட் மிஸ்

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் கேப்டன் ஆரோன் பின்ச்க்கு பதிலாக மாத்யூ வேட் கேப்டனாக பொறுப்பு வகித்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஷிகர் தவானை ஸ்டம்ப் அவுட் செய்ய முயற்சித்த வேட்டின் முயற்சி அவருக்கு கைகொடுக்கவில்லை.

ஜோக்கடித்த மாத்யூ வேட்

ஸ்வெப்சனின் பௌலிங்கில் வேட் இந்த அவுட்டை மிஸ் செய்தார். இதையடுத்து ஷிகர் தவானிடம் மேத்யூ வேட் தான் தோனி போல வேகத்துடன் கீப்பிங்கை மேற்கொள்ளவில்லை என்று ஜோக்கடித்தார். இதையடுத்து மைதானத்தில் ஷிகர் தவானும் சிரிப்புடன் தனது பேட்டிங்கை தொடர்ந்தார்.

அரைசதம் அடித்த தவான்

அரைசதம் அடித்த தவான்

இந்த 2வது டி20 போட்டியில் தவான் அடித்த அரைசதம் மற்றும் விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவின் ரன்கள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கும் மற்றும் தொடர் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. ஷிகர் தவான் 52 ரன்களை அடித்து ஆடம் சம்பாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

Story first published: Monday, December 7, 2020, 17:03 [IST]
Other articles published on Dec 7, 2020
English summary
Dhawan went on to score his 11th T20I half-century, before being dismissed by Adam Zampa for 52
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X