For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் போட்டியில விளையாடுறது சிறப்பானது... அது அவ்வளவு பிடிக்கும்... விராட் கோலி நெகிழ்ச்சி

மும்பை : டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதை போல மனதிற்கு நெருக்கமானது எதுவும் இல்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதை தான் பாக்கியமாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 7,240 ரன்களை குவித்துள்ளார். இதில் 27 சதங்கள் மற்றும் 22 அரைசதங்கள் அடங்கும்.

2வது கட்ட கோவிட் -19 டெஸ்ட்... முழுமூச்சில் தயாராகும் இங்கிலாந்து வீரர்கள் 2வது கட்ட கோவிட் -19 டெஸ்ட்... முழுமூச்சில் தயாராகும் இங்கிலாந்து வீரர்கள்

2வது இடத்தில் விராட் கோலி

2வது இடத்தில் விராட் கோலி

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,240 ரன்களை குவித்துள்ளார். இதில் 27 சதங்கள் மற்றும் 22 அரைசதங்கள் அடங்கும். இதேபோல 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,867 ரன்களையும் 82 டி20 போட்டிகளில் விளையாடி 2,794 ரன்களையும் குவித்துள்ளார்.

விராட் கோலி பெருமிதம்

விராட் கோலி பெருமிதம்

எப்போதும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து பெருமிதம் தெரிவித்து வரும் விராட் கோலி, சமீபத்தில் அதன் வடிவத்தை மாற்றியமைக்கும் ஐசிசியின் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். டெஸ்ட் போட்டிகளின் பாரம்பரியத்தை மாற்றி அமைப்பதன்மூலம் கிரிக்கெட்டின் அழகு குலைந்துவிடும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் கோலி கருத்து

இன்ஸ்டாகிராமில் கோலி கருத்து

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதை போன்று மனதிற்கு நெருக்கமானது எதுவும் இல்லை என்று விராட் கோலி கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் இதை பகிர்ந்துள்ள கோலி, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதை தான்பாக்கியமாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் வீரர் கவாஸ்கர் பாராட்டு

முன்னாள் வீரர் கவாஸ்கர் பாராட்டு

முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் விவியன் ரிச்சர்ட்சுடன் விராட் கோலியின் ஆட்டம் பல விஷயங்களில் ஒத்திருப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனால்தான் கோலியால் நம்பர் ஒன் வீரராக திகழ முடிவதாகவும் அவர் பாராட்டியிருந்தார். இதே கருத்தையே முன்னாள் வீரர்கள், குண்டப்பா விஸ்வநாத் மற்றும் விவிஎஸ் லஷ்மன் ஆகியோரும் தெரிவித்திருந்தனர்.

Story first published: Wednesday, June 24, 2020, 16:22 [IST]
Other articles published on Jun 24, 2020
English summary
What a blessing to be able to play Test Cricket for India -Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X