For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்ப எனக்கு நேரம் சரியில்ல.. கஷ்டமா இருக்கு.. ஆனா திரும்பி வருவேன்..! கவலையில் ‘கப்பார் ‘

திருவனந்தபுரம்: தென் ஆப்ரிக்கா ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வருவதாகவும், சோதனையான காலகட்டத்தில் இருப்பதாகவும் தொடக்க வீரர் ஷிகர் தவான் கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் தொடக்க வீரர் தவான். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் தொடக்க பேட்ஸ்மேனான அவர், உலக கோப்பை தொடரின்போது காயத்தால் வெளியேறினார். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் உள்ளே வந்தார். ஆனால், பெரிதாக அவர் சோபிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். பார்ம் இன்றி தவித்து வருவதால் தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகளில் விளையாட வலியுறுத்தப்பட்டார்.

யாரு பெஸ்ட் பிளேயர்..? ஸ்மித்தா.. கோலியா? 'அதை' வச்சு எடை போட்ட ஜாம்பவான்..!!யாரு பெஸ்ட் பிளேயர்..? ஸ்மித்தா.. கோலியா? 'அதை' வச்சு எடை போட்ட ஜாம்பவான்..!!

அரைசதம் அபாரம்

அரைசதம் அபாரம்

அதனடிப்படையில் 4வது போட்டியில் தவான் களம் இறங்கினார். 5வது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் தென் ஆப்ரிக்கா ஏ உடனான ஆட்டம் பற்றி தவான் கூறியிருப்பதாவது:

ரசித்து விளையாடினேன்

ரசித்து விளையாடினேன்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரானது சிறந்த பயிற்சி ஆட்டம் என்று கருதுகிறேன். நீண்ட நாட்களுக்குப்பின் இந்திய ஏ அணியில் இடம் பிடித்து 2 அரைசதங்கள் அடித்தது சிறப்பு. மிகவும் ரசித்து விளையாடினேன்.

ஓய்வு கிடைக்கிறது

ஓய்வு கிடைக்கிறது

தென் ஆப்ரிக்கா தொடருக்கு முன் எனக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி ஆட்டம் என்பது தெரியும். டெஸ்ட் போட்டியில் நான் விளையாடாததால் போதுமான ஓய்வு கிடைக்கிறது.

என்ன சிந்தனை?

என்ன சிந்தனை?

களத்தில் இறங்கி விளையாடுவதைத் தவிர வேறும் எந்த சிந்தனையும் இப்போது என்னிடம் இல்லை.அணியில் உள்ள இளைய வீரர்களும் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்றார்.

Story first published: Saturday, September 7, 2019, 11:29 [IST]
Other articles published on Sep 7, 2019
English summary
Now I become more confident says Indian opener Shikhar Dhawan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X