For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த அடி போதுமா? 6 பந்தில் 6 சிக்ஸ்.. ஒரே ஓவரில் சோலியை முடித்த வீரர்.. கதறிய எதிரணி!

கிறைஸ்ட்சர்ச் : ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸ் அடித்து போட்டியின் போக்கையே மாற்றி, தன் அணிக்கு வெற்றி தேடித் தந்தார் லியோ கார்டர் எனும் நியூசிலாந்து வீரர்.

நியூசிலாந்து உள்ளூர் டி20 தொடர் ஒன்றில் தான் கேன்டர்பரி கிங்ஸ் அணி வீரர் லியோ கார்ட்டர் இந்த சாதனையை செய்தார்.

உலகிலேயே ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடிக்கும் ஏழாவது வீரர் ஆவார் கார்ட்டர். அவரது அதிரடியால் 219 ரன்கள் குவித்த எதிரணி தோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியது.

டி20 தொடர்

டி20 தொடர்

நியூசிலாந்து நாட்டில் சூப்பர் ஸ்மாஷ் எனும் உள்ளூர் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அந்த தொடரில் கேன்டர்பரி கிங்ஸ் மற்றும் நார்தர்ன் நைட்ஸ் அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற்றது.

219 ரன்கள்

219 ரன்கள்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நார்தர்ன் நைட்ஸ் அணி 219 ரன்கள் குவித்தது. அடுத்து கேன்டர்பரி அணி சேஸிங் செய்தது. முதல் 15 ஓவரில் அந்த அணி 156 ரன்கள் குவித்தது.

5 ஓவரில் 64 ரன்கள்

5 ஓவரில் 64 ரன்கள்

கடைசி 5 ஓவரில் 64 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேன்டர்பரி கிங்ஸ் அணி ஆடியது. அப்போது லியோ கார்ட்டர் 12 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வந்தார்.

ஆறு சிக்ஸர்கள்

ஆறு சிக்ஸர்கள்

16வது ஓவரை ஆன்டன் டேவ்கிக் எனும் இடது கை சுழற் பந்துவீச்சாளர் வீசினார். அந்த ஓவரின் ஆறு பந்துகளையும் மிக எளிதாக சிக்ஸருக்கு விரட்டினார் லியோ கார்ட்டர்.

வெற்றி

வெற்றி

அவரது இந்த அதிரடியால் கேன்டர்பரி கிங்ஸ் 18.5 ஓவரில் வெற்றி இலக்கான 220 ரன்களை கடந்தது. அந்த அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

எப்படி அடித்தார்?

எப்படி அடித்தார்?

லியோ கார்ட்டர் 29 பந்துகளில் 70 ரன்கள் அடித்து இருந்தார். அவர் 7 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். அவர் ஒரே ஓவரில் அடித்த ஆறு சிக்ஸர்களும் லெக் திசையில் அடிக்கப்பட்டது.

சாதனை செய்தார்

சாதனை செய்தார்

மேலும், உலக அளவில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த ஏழாவது வீரர் என்ற பெருமை பெற்றார் லியோ கார்ட்டர். அதே போல, நியூசிலாந்தில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரரும் அவர் தான்.

அந்த ஆறு வீரர்கள்

முன்னதாக கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, ஹெர்ஷல் கிப்ஸ், யுவராஜ் சிங், ராஸ் வைட்லி, ஹசரத்துல்லா ஜஜாய் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து இமாலய சாதனையை செய்துள்ளனர்.

டி20 சாதனை

டி20 சாதனை

டி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் நான்காவது வீரர் என்ற சாதனையையும் புரிந்தார். முன்னதாக யுவராஜ் சிங், ராஸ் வைட்லி, ஹசரத்துல்லா ஜஜாய் ஆகியோர் டி20 போட்டிகளில் இந்த சாதனையை செய்துள்ளனர்.

Story first published: Sunday, January 5, 2020, 18:01 [IST]
Other articles published on Jan 5, 2020
English summary
NZ player Leo Carter hit six sixes in an over. He became seventh player in the world to do this rare feat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X