For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

1983ம் ஆண்டு இந்தியா எடுத்த அதே ஸ்கோரை எடுத்த "இந்திய ஆதரவு" நியூசிலாந்து!

சென்னை: 1983ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எடுத்த அதே 183 என்ற ஸ்கோரை இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் எடுத்துள்ளது நியூசிலாந்து.

ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், பால்க்னர் ஆகியோரின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி விட்டது நியூசிலாந்து.

உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் 200 ரன்களுக்கு கீழ் ஒரு அணி எடுப்பது இது 6வது முறையாகும்.

இந்தியா எடுத்த அதே ஸ்கோர்

இந்தியா எடுத்த அதே ஸ்கோர்

1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகளும் மோதின. அதில் இந்தியா 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் மேற்கு இந்தியத் தீவுகளை 140 ரன்களுக்கு சுருட்டி அது சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றியது.

இந்திய ரசிகர்களின் ஆதரவு

இந்திய ரசிகர்களின் ஆதரவு

தற்போது அந்த இந்தியாவின் ஸ்கோரை இப்போது நி்யுசிலாந்து எடுத்துள்ளது. நியூசிலாந்துக்கு இந்திய ரசிகர்கள் ஆதரவு கொடுத்துப் போட்டியைப் பார்த்து ரசித்த நிலையில் நமது இந்தியா 1983ல் எடுத்த அதே ஸ்கோரை நியூசிலாந்தும் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

லோ ஸ்கோர்

லோ ஸ்கோர்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இதற்கு முன்பு 5 முறை 200 ரன்களுக்குக் கீழ் ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆரம்பித்து வைத்த இங்கிலாந்து

ஆரம்பித்து வைத்த இங்கிலாந்து

இதை முதலில் இங்கிலாந்துதான் செய்தது. 1979 இறுதிப் போட்டியில் அது 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

2வது இந்தியா

2வது இந்தியா

1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

1999ல் பாகிஸ்தான், ஆஸி.

1999ல் பாகிஸ்தான், ஆஸி.

1999 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து சாம்பியன் ஆனது.

99க்குப் பிறகு இதுதான் முதல் முறை

99க்குப் பிறகு இதுதான் முதல் முறை

1999 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஒரு அணி 200 ரன்களுக்குக் குறைவாக ஸ்கோர் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 29, 2015, 13:13 [IST]
Other articles published on Mar 29, 2015
English summary
This is the sixth time in the wc finals a team scores under 200.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X