For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே பந்தில் 7 ரன் அடித்த நியூசிலாந்து வீரர்..!! சுவாரஸ்ய நிகழ்வு,, NZ vs Ban 2nd Test..

கிறிஸ்ட்சர்ச்: புத்தாண்டின் தொடக்கத்திலேயே உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வங்கதேச அணி வீழ்த்தியது

இதனால் நியூசிலாந்து அணி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது.

இது ராஸ் டைலருக்கு கடைசி டெஸ்ட் ஆகும். ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்தது. இதனால் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

உங்களை சுளுக்கு எடுக்க அவர் வராரு..!! தென்னாப்பிரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த இளம் வீரர்..உங்களை சுளுக்கு எடுக்க அவர் வராரு..!! தென்னாப்பிரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த இளம் வீரர்..

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாத்தம் ஒரே ஓவரில் 2 முறை எல்.பி. டபிள்யூ ஆனார். ஆனால் ரிவ்யூ மூலம் இரண்டு முறையும் தப்பித்தார். இதே போன்று வில் யங் கொடுத்த கேட்ச் வாய்ப்பை வங்கதேச வீரர்கள் தவறவிட்டனர். இதன் பின்னர் வங்கதேச அணி வீரர்கள் போட்டிக்குள் வரவே இல்லை

சாதனை தொடக்கம்

சாதனை தொடக்கம்

இதனைத் தொடர்ந்து டாம் லத்தம், வில் யங் ஆகியோர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 148 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் நடைபெறும் முதல் இன்னிங்சில் தொடக்க வீரர்கள் 100 ரன்களை கடந்தனர்.

7 ரன்கள்

7 ரன்கள்

ஆட்டத்தின் 25.5வது ஓவரில் வில் யங் 26 ரன்கள் இருந்த போது எபாதத் ஹூசைன் வீசிய பந்தை அடிக்க, அது ஸ்லிப்க்கு பறந்தது. அதனை வங்கதேச வீரர்கள் தவறவிட பந்து பவுண்டரி கோட்டை நோக்கி ஓடியது. அதனை தடுத்த வங்கதேச வீரர், கீப்பரிடம் பந்தை எறிந்தார். அதற்குள் நியூசிலாந்து வீரர்கள் 3 ரன்கள் ஓடினர். சும்மா இல்லாத கீப்பர் லிட்டன் தாஸ் மீண்டும் பந்தை பவுலரை நோக்கி எறிய, அதனை அவர் பிடிக்க தவறினார். இதனால் பந்து பவுண்டரிக்கு சென்றது. இதன் மூலம் ஒரே பந்தில் வில் யங் 7 ரன்கள் எடுத்தார்

லாத்தம் 186

லாத்தம் 186

வில் யங், 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய டாம் லாத்தம் 12வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் பின்னர் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டாம் லாத்தம், கான்வே ஜோடியும் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 201 ரன்களை சேர்த்துள்ளது. 90 ஓவரில் 40 பவுண்டரிகளுக்கு மேல் விளாசிய நியுசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை எடுத்துள்ளது. டாம் லாத்தம் 186 ரன்களுடனும், கான்வே 99 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Story first published: Sunday, January 9, 2022, 17:47 [IST]
Other articles published on Jan 9, 2022
English summary
NZ vs Ban 2nd Test- NZ Player Will young score 7 runs in a single deliveryஒரே பந்தில் 7 ரன் அடித்த நியூசிலாந்து வீரர்..!! சுவாரஸ்ய நிகழ்வு,, NZ vs Ban 2nd Test..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X