For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 தொடருக்காக காத்துக்கிட்டிருந்தாரு... ஆனா நடந்ததோ வேற... பாபர் குறித்து மிஸ்பா பரிதாபம்!

ஆக்லாந்து : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி வரும் 18ம் தேதி முதல் டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

இதற்கென முன்னதாக குவாரன்டைனில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் அணி, தற்போது டி20 தொடரில் விளையாட தயாராகவுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பார்த்துக்குங்க.. கிளம்பும் முன் சொல்லிவிட்டு செல்லும் கோலி.. பெரிய திட்டம்..ரோஹித்திற்கு என்ன ஆகுமோபார்த்துக்குங்க.. கிளம்பும் முன் சொல்லிவிட்டு செல்லும் கோலி.. பெரிய திட்டம்..ரோஹித்திற்கு என்ன ஆகுமோ

டி20, டெஸ்ட் தொடர்

டி20, டெஸ்ட் தொடர்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியினர் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளனர். இதற்கென முன்னதாக குவாரன்டைனில் ஈடுபட்டிருந்த அந்த அணியினரில் சில வீரர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

18ம் தேதி துவக்கம்

18ம் தேதி துவக்கம்

வரும் 18ம் தேதி துவங்கி 22ம் தேதிவரையில் ஆக்லாந்து, ஹாமில்டன் மற்றும் நேப்பியர் உள்ளிட்ட இடங்களில் டி20 தொடரின் 3 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கென இன்று பயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், கேப்டன் பாபர் அசாமிற்கு வலதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.

டி20 தொடரிலிருந்து நீக்கம்

டி20 தொடரிலிருந்து நீக்கம்

இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கட்டைவிரலில் பிராக்சர் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் 12 நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து டி20 போட்டிகளில் இருந்து அசாம் நீக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அவர் டி20 போட்டிகளுக்காக காத்திருந்ததாகவும் ஆனால் நிலைமை வேறுவிதமாக அமைந்துள்ளதாகவும் அணியின் தலைமை கோச் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் கண்காணிப்பு

மருத்துவர்கள் கண்காணிப்பு

இரு அணிகளுக்கிடையில் வரும் 26ம் தேதி பே ஓவலில் முதல் டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. அந்த போட்டியில் பாபர் அசாம் பங்கேற்கும்வகையில் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாகவும் மிஸ்பா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாபர் அசாம் டி20 தொடரில் பங்கேற்க முடியாதது குறித்தும் அவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, December 13, 2020, 12:51 [IST]
Other articles published on Dec 13, 2020
English summary
It is hugely disappointing to lose a player of Babar Azam's Calibre for the T20Is -Misbah
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X