இப்ப எங்களைப் பார்த்தா பயம் வருதா? முடிஞ்சா தொட்டுப் பாரு.. 400+ அடித்து வெஸ்ட் இண்டீஸ் மெர்சல்!!

பிரிஸ்டல் : உலகக்கோப்பை அரங்கில் எந்த அணி அரையிறுதி செல்லும் என பலரும் விவாதித்தார்கள். யாரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால், பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை புரட்டி எடுத்து, நானூறு ரன்களைக் கடந்து மெர்சல் காட்டியுள்ளது வெஸ்ட் இண்டீஸ். உலகக்கோப்பை தொடரில் மற்ற அணிகள் தங்களை எளிதாக எடுத்துக் கொண்டுவிட முடியாது என அறைகூவல் விடுத்துள்ளது.

பயிற்சி ஆட்டத்திற்கே இப்படியா.. இனிதான் காளியோட ஆட்டமே இருக்கு.. இந்திய அணியை கொண்டாடும் ரசிகர்கள்!

ஸ்ட்ரைக் ரேட்

ஸ்ட்ரைக் ரேட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒன்பது பேட்ஸ்மேன்கள் 20+ ரன்கள் எடுத்தனர். ஒன்பது பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேல். முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 421 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை மிரட்டியது.

முதலில் நிதானம்

முதலில் நிதானம்

முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் நிதானமாகத்தான் ஆடினார்கள். கிறிஸ் கெயில் 36, ஈவின் லீவிஸ் 50, ஷாய் ஹோப் 101, டேரன் பிராவோ 25, ஹெட்மையர் 27 ரன்கள் எடுத்தனர். அதாவது இவர்கள் ஆடிக் கொண்டு இருக்கும் போது ஓவருக்கு 7+ ரன்களை எடுத்து வந்தது வெஸ்ட் இண்டீஸ். அதுதான் அவர்களது நிதான ஆட்டம்!!

400+ ஸ்கோர்

400+ ஸ்கோர்

அதன் பின், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 47 மற்றும் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல் 54 இன்னும் அதிரடியை கூட்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி 400 ரன்களை தாண்டியது. 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 421 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து தோல்வி

நியூசிலாந்து தோல்வி

நியூசிலாந்து அணி மிகவும் போராடி 50 ஓவர்களில் 330 ரன்கள் மட்டுமே எடுத்து 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம், உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆழமாக ஒரு செய்தியை கூறி உள்ளது.

ஐபிஎல்-ஆக மாறுமா?

ஐபிஎல்-ஆக மாறுமா?

பேட்டிங்கில் அதிரடியாகத்தான் ஆடுவோம். முடிந்தால் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள் என மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடும் உலகக்கோப்பை போட்டிகள், ரசிகர்களுக்கு மற்றொரு ஐபிஎல் தொடராக இருக்கப் போகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
NZ vs WI World cup 2019 Warm up match : West Indies scored 421 runs
Story first published: Wednesday, May 29, 2019, 11:10 [IST]
Other articles published on May 29, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X